தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-171

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “அலீயே! தொழுகையை அதன் நேரம் வந்ததும்; ஜனாஸா தயாராகி விட்டதும்; துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான வரனை நீர் கண்டதும்” (ஆகிய) இந்த மூன்று காரியங்களைத் தள்ளிப் போடாதீர்” என்று என்னிடம் கூறினார்கள்.

(திர்மிதி: 171)

حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الجُهَنِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: ” يَا عَلِيُّ، ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا: الصَّلَاةُ إِذَا آنَتْ، وَالجَنَازَةُ إِذَا حَضَرَتْ، وَالأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْئًا


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-171.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-156.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17437-ஸயீத் பின் அப்துல்லாஹ் அல்ஜுஹனீ என்பவர் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் தனது ஸிகாதில் பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இவ்வாறே இப்னு கல்ஃபூன் பிறப்பு ஹிஜ்ரி 555
    இறப்பு ஹிஜ்ரி 636
    வயது: 81
    அவர்களும் பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • இவரிடமிருந்து அப்துல்லாஹ் பின் வஹ்ப் மட்டுமே அறிவிப்பதால் இவர் அறியப்படாதவர் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/37, தஹ்தீபுத் தஹ்தீப்-2/28)

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இவரை தனது தக்ரீபில் மக்பூல் தரத்திலும், தனது தல்கீஸுல் ஹபீரில் அறியப்படாதவர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/382, தல்கீஸ்-1/475)

  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், அறியப்படாதவர்களையும் பலமானவர்களின் பட்டியலில் கூறுவதைப் போன்றே இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாமும் கூறுவார் என்பதால் தான் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்ற பலர் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாமின் கூற்றை ஏற்பதில்லை. ஆனால் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம், இப்னு ஹிப்பானைப் போன்று அல்ல. எனவே மேற்கண்ட செய்தியை பலர் விமர்சித்திருந்தாலும் இது அறிவிப்பாளர்தொடர் சரியான செய்தியாகும்.

(இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாமைப் பற்றிய தகவல் பார்க்க: நெஞ்சில் கை கட்டுதல் ஆய்வு )

1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-828 , இப்னு மாஜா-1486 , திர்மிதீ-171 , 1075 , ஹாகிம்-2686 , குப்ரா பைஹகீ-13757 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: …

4 comments on Tirmidhi-171

  1. இப்னு ஹிப்பான் யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலில் சேர்த்து விடுவார், எனவே இதை ஆதாரமாகக் கொண்டு இந்த செய்தியை எப்படி சரி என்று கூறுகிறீர்கள்?

    1. இப்னு ஹிப்பான் அவர்களை மட்டும் நாம் கூறவில்லை, ஸயீத் பின் அப்துல்லாஹ் அல்ஜுஹனீ என்பவர் பற்றி இஜ்லீ அவர்களும் பலமானவர் என்று கூறியுள்ளார்.

    2. இஜ்லீயைத் தவிர யாரும் நம்பகமானவர் என்று கூறாத ஒருவரை அல்பானி ஏற்றுக் கொள்கிறார். (இப்னு ஹஜர் நம்பகமானவர் என்று கூறியிருப்பது, இஜ்லீயின் கூற்றின் அடிப்படையில் தான். ஏனெனில் இப்னு ஹஜர் அவர்கள் பிற்காலத்தவர். அவர் இதை சுயமாகக் கூற முடியாது)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.