தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1075

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஜனாஸாவை விரைவாக அடக்கம் செய்தல்.

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “அலீயே! தொழுகையை அதன் நேரம் வந்ததும்; ஜனாஸா தயாராகி விட்டதும்; துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான வரனை நீர் கண்டதும்” (ஆகிய) இந்த மூன்று காரியங்களைத் தள்ளிப் போடாதீர்” என்று என்னிடம் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஃகரீப் தரத்தில் உள்ள செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரை முத்தஸிலாக-முறிவில்லாத அறிவிப்பாளர் தொடராக நான் கருதவில்லை.

(திர்மிதி: 1075)

بَابُ مَا جَاءَ فِي تَعْجِيلِ الجَنَازَةِ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الجُهَنِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: ” يَا عَلِيُّ، ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا: الصَّلَاةُ إِذَا أَتَتْ، وَالجَنَازَةُ إِذَا حَضَرَتْ، وَالأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْئًا

هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَمَا أَرَى إِسْنَادَهُ بِمُتَّصِلٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1075.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-993.




  • இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர் பற்றி திர்மிதீ இமாம் இதன் அறிவிப்பாளர்தொடரை முத்தஸிலாக-முறிவில்லாத அறிவிப்பாளர் தொடராக நான் கருதவில்லை என்று கூறியுள்ளார். காரணம் முஹம்மது பின் உமர், தனது தந்தை உமர் பின் அலீ அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா? இல்லையா? என்பதால் தான்.
  • ஆனால் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், உமர் பின் அலீ அவர்களைப் பற்றிய குறிப்பில் இவர் தனது தந்தை அலீ (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்றும் இவரிடமிருந்து இவர் மகன் முஹம்மது பின் உமர் ஹதீஸை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/124)

எனவே இது அறிவிப்பாளர்தொடர் முறிவடைந்த செய்தி என்று கூறுவது சரியல்ல.

மேலும் பார்க்க: திர்மிதீ-171 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.