அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “அலீயே! தொழுகையை அதன் நேரம் வந்ததும்; ஜனாஸா தயாராகி விட்டதும்; துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான வரனை நீர் கண்டதும்” (ஆகிய) இந்த மூன்று காரியங்களைத் தள்ளிப் போடாதீர்” என்று என்னிடம் கூறினார்கள்.
(திர்மிதி: 171)حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الجُهَنِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: ” يَا عَلِيُّ، ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا: الصَّلَاةُ إِذَا آنَتْ، وَالجَنَازَةُ إِذَا حَضَرَتْ، وَالأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْئًا
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-156.
Tirmidhi-Shamila-171.
Tirmidhi-Alamiah-156.
Tirmidhi-JawamiulKalim-156.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா
2 . குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ
3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்-அல்குரஷீ
4 . ஸயீத் பின் அப்துல்லாஹ்-அல்ஜுஹனீ
5 . முஹம்மத் பின் உமர் பின் அலீ-அபூஅப்துல்லாஹ்
6 . உமர் பின் அலீ பின் அபூதாலிப்
7 . அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி)
மேலும் பார்க்க: திர்மிதீ-1075.
இப்னு ஹிப்பான் யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலில் சேர்த்து விடுவார், எனவே இதை ஆதாரமாகக் கொண்டு இந்த செய்தியை எப்படி சரி என்று கூறுகிறீர்கள்?
இப்னு ஹிப்பான் அவர்களை மட்டும் நாம் கூறவில்லை, ஸயீத் பின் அப்துல்லாஹ் அல்ஜுஹனீ என்பவர் பற்றி இஜ்லீ அவர்களும் பலமானவர் என்று கூறியுள்ளார்.
இஜ்லீயைத் தவிர யாரும் நம்பகமானவர் என்று கூறாத ஒருவரை அல்பானி ஏற்றுக் கொள்கிறார். (இப்னு ஹஜர் நம்பகமானவர் என்று கூறியிருப்பது, இஜ்லீயின் கூற்றின் அடிப்படையில் தான். ஏனெனில் இப்னு ஹஜர் அவர்கள் பிற்காலத்தவர். அவர் இதை சுயமாகக் கூற முடியாது)
இஜ்லீ இமாம், இப்னு ஹிப்பானைப் போன்று அல்ல
https://www.youtube.com/watch?v=aKcUGgpAmlc