தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1486

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“ஜனாஸா தயாராகி விட்டதும் (அதை அடக்கம் செய்வதை) தாமதப்படுத்தாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

(இப்னுமாஜா: 1486)

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ عَبْدِ اللَّهِ الْجُهَنِيُّ، أَنَّ مُحَمَّدَ بْنَ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تُؤَخِّرُوا الْجِنَازَةَ إِذَا حَضَرَتْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1486.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1475.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11442-ஹர்மலா பின் யஹ்யா என்பவரை சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். இவர் இப்னு வஹ்பின் செய்திகளை நன்கு அறிந்தவர் என்று உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/372, …)

  • என்றாலும் இப்னு வஹ்பிடமிருந்து இந்த செய்தியை அறிவிக்கும் ஹர்மலா பின் யஹ்யாவை விட குதைபா பின் ஸயீத் மிகப் பலமானவர் என்பதால் குதைபா பின் ஸயீத் அவர்களின் அறிவிப்புக்கே முன்னுரிமை தரவேண்டும். மேலும் குதைபா பின் ஸயீத் போன்றே ஹாரூன் பின் மஃரூப், காலித் பின் கிதாஷ் ஆகியோரும் அறிவித்துள்ளனர். (பார்க்க: திர்மிதீ-171 , அஹ்மத்-828 , அன்னஃபகது அலல் இயால்-132)

மேலும் பார்க்க: திர்மிதீ-171 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.