அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “அலீயே! தொழுகையை அதன் நேரம் வந்ததும்; ஜனாஸா தயாராகி விட்டதும்; துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான வரனை நீர் கண்டதும்” (ஆகிய) இந்த மூன்று காரியங்களைத் தள்ளிப் போடாதீர்” என்று என்னிடம் கூறினார்கள்.
(ஹாகிம்: 2686)أَخْبَرَنِي الشَّيْخُ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي هَارُونُ بْنُ مَعْرُوفٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجُمَحِيُّ، أَنَّ مُحَمَّدَ بْنَ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
ثَلَاثٌ يَا عَلِيُّ لَا تُؤَخِّرْهُنَّ: الصَّلَاةُ إِذَا آنَتْ، وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ، وَالْأَيِّمُ إِذَا وَجَدَتْ كُفْؤًا
هَذَا حَدِيثٌ غَرِيبٌ صَحِيحٌ، وَلَمْ يُخَرِّجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2686.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-2611.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் முஹம்மது பின் உமரிடமிருந்து அறிவிப்பவரின் பெயரை ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அல்ஜுமஹீ என்று கூறியிருப்பது தவறாகும். ஸயீத் பின் அப்துல்லாஹ் அல்ஜுஹனீ என்பதே சரியாகும். இதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்.
(நூல்: தல்கீஸ்-1/475)
மேலும் பார்க்க: திர்மிதீ-171 .
சமீப விமர்சனங்கள்