தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-20350

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலுவை இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், தவ்பா அத்தியாத்தின் “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதபோதகர்களை வணங்கவில்லையே! என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்”. என்றாலும் அல்லாஹ் (ஹராம் என்று) தடுத்ததை அவர்கள் அனுமதித்தபோது அதை அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டார்கள்; அல்லாஹ் (ஹலால் என்று) அனுமதித்ததை மதபோதகர்கள் தடைசெய்தபோது அதை அவர்கள் தடை செய்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் செய்தது, அவர்களை வணங்கியது (போன்று) தான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

(பைஹகீ-குப்ரா: 20350)

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ , أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ , ثنا ابْنُ أَبِي قُمَاشٍ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ , عَنْ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ الْمُلَائِيِّ , عَنْ غُطَيْفٍ الْجَزَرِيِّ , عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ , قَالَ: فَسَمِعْتُهُ يَقُولُ: ” {اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللهِ} [التوبة: 31] ” , قَالَ: قُلْتَ: يَا رَسُولَ اللهِ , إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ قَالَ: ” أَجَلْ , وَلَكِنْ يُحِلُّونَ لَهُمْ مَا حَرَّمَ اللهُ , فَيَسْتَحِلُّونَهُ , وَيُحَرِّمُونَ عَلَيْهِمْ مَا أَحَلَّ اللهُ , فَيُحَرِّمُونَهُ , فَتِلْكَ عِبَادَتُهُمْ لَهُمْ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-20350.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-18725.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஃகுதைஃப் பின் அஃயன் என்பவர் அறியப்படாதவர் என்று திர்மிதீ இமாம் கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-23/117, தஹ்தீபுத் தஹ்தீப்-3/377, லிஸானுல் மீஸான்-6/308, தக்ரீபுத் தஹ்தீப்-1/777)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-3095 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.