தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3095

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலுவை இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், இந்த சிலுவையை எறிந்து விடுங்கள் என்று கூறினார்கள். பின்னர் பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

மேலும் இவர்கள், அவர்களை வணங்கவில்லை. மாறாக அவர்கள் ஏதாவது ஒன்றை ஹலால்-அனுமதிக்கப்பட்டவை என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) இவர்களும் அதை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்வார்கள். ஏதாவது ஒன்றை அவர்களுக்கு ஹராம்-தடுக்கப்பட்டவை என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) இவர்களும் அதை தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஃகரீப் எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்தச் செய்தியை அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் என்பவர் வழியாகவே நாம் அறிகிறோம்.

மேலும் இதில் இடம்பெறும் ஃகுதைஃப் பின் அஃயன் என்பவர் (ஹதீஸ்கலை அறிஞர்களிடம்) அறியப்படாதவர் ஆவார்.

(திர்மிதி: 3095)

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ يَزِيدَ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنْ غُطَيْفِ بْنِ أَعْيَنَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ:

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ. فَقَالَ: «يَا عَدِيُّ اطْرَحْ عَنْكَ هَذَا الوَثَنَ»، وَسَمِعْتُهُ يَقْرَأُ فِي سُورَةِ بَرَاءَةٌ: {اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ} [التوبة: 31]، قَالَ: «أَمَا إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ، وَلَكِنَّهُمْ كَانُوا إِذَا أَحَلُّوا لَهُمْ شَيْئًا اسْتَحَلُّوهُ، وَإِذَا حَرَّمُوا عَلَيْهِمْ شَيْئًا حَرَّمُوهُ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ، وَغُطَيْفُ بْنُ أَعْيَنَ لَيْسَ بِمَعْرُوفٍ فِي الحَدِيثِ»


Tirmidhi-Tamil-3020.
Tirmidhi-TamilMisc-3020.
Tirmidhi-Shamila-3095.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3039.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33225-ஃகுதைஃப் பின் அஃயன் என்பவர் அறியப்படாதவர் என்று திர்மிதீ இமாம் கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-23/117, தஹ்தீபுத் தஹ்தீப்-3/377, லிஸானுல் மீஸான்-6/308, தக்ரீபுத் தஹ்தீப்-1/777)

என்றாலும் சில ஆதாரங்களைக் குறிப்பிட்டு தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் இவரை பலவீனமானவர் என்று கூறியதற்கு காரணம் ரவ்ஹு பின் ஃகுதைஃப் என்று ஒருவர் இருக்கிறார். இவர் பலவீனமானவர் (என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்). அவர் தான், இவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கருதிவிட்டார் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் கூறியிருப்பதையும்; இவ்வாறே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம், இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
ஆகியோர் இருவர் பற்றியும் தனித்தனியாக தகவல் கூறியிருப்பதையும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் இந்த செய்தியை திர்மிதீ இமாம் ஹஸன் (ஃகரீப்) என்று கூறியதாக ஸைலயீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் தக்ரீஜ் கஷ்ஷாஃபிலும், ஸுயூத்தி பிறப்பு ஹிஜ்ரி 849
இறப்பு ஹிஜ்ரி 911
வயது: 62
அவர்கள் தனது துர்ருல் மன்ஸூர் என்ற நூலிலும் கூறியுள்ளனர். இதற்கு காரணம் மேற்கண்ட திர்மிதீ நூலின் பிரதியில் ஹஸன் என்று இடம்பெறாவிட்டாலும் வேறு சில பிரதிகளில் அவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதால் தான் அந்த அறிஞர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.

இதில் அறியப்படாதவர் இடம்பெற்றாலும் அபுல்பக்தரீ என்பவரின் வழியாகவும் இந்தக் கருத்து வந்திருப்பதால் தான் திர்மிதீ அவர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார் என்பதையும்; இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
அவர்கள் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் இதை (வேறு நூலில் வேறு அறிவிப்பாளர்தொடரில்) பதிவு செய்துள்ளார் என்று கூறி இதை பலமான செய்தி என்று கூறியிருப்பதையும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-6668 (3/336), அஸ்ஸஹீஹா-3293)

திர்மிதீ இமாம் ஹஸன் என்று கூறினால் அது ஹஸனுன் லிஃகைரிஹீ ஆகும்.

  • இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
    இறப்பு ஹிஜ்ரி 774
    வயது: 74
    அவர்கள் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் பதிவு செய்துள்ளதாக கூறும் நீண்ட ஹதீஸ் நாம் பார்த்தவரை கிடைக்கவில்லை. அபூஜஃபர் தபரீ பிறப்பு ஹிஜ்ரி 224
    இறப்பு ஹிஜ்ரி 310
    வயது: 86
    (இப்னு ஜரீர்) அவர்கள் இந்தக் கருத்தில் வரும் பல செய்திகளை பதிவு செய்துள்ளார். அனைத்தும் பலவீனமாகவே உள்ளது.

(நூல்: தஃப்ஸீரு இப்னு கஸீர்-4/135, தஃப்ஸீருத் தபரீ-11/416)

  • ஃகுதைஃப் பின் அஃயன் என்பவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் இந்தச் செய்தி அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) அவர்கள், ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாகவும் வந்துள்ளது.

என்றாலும் இவர் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்கவில்லை. இவ்வாறே மற்ற மூத்த நபித்தோழர்களிடமும் ஹதீஸைக் கேட்கவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) போன்ற சிறு வயது நபித்தோழர்களிடம் மட்டுமே ஹதீஸைக் கேட்டுள்ளார்…

(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/154)

மேலும் இந்தக் கருத்தில் வரும் வேறு சில அறிவிப்பாளர்தொடர்களும் பலவீனமானது என்பதால் இந்த செய்தி பலவீனமானதாகும்.

ஆய்வுக்காக: صحة حديث عدي بن حاتم الطائي وقوله ما عبدناهم .

1 . இந்தக் கருத்தில் அதீ பின் ஹாதிம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3095 , அல்முஃஜமுல் கபீர்-218 , 219 , குப்ரா பைஹகீ-20350 ,

2 . ஹுதைஃபா பின் யமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-20351 .

3 . அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34936 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.