தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-34936

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(தவ்பா அத்தியாயத்தின்) “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31)

எனும் வசனத்தின் விளக்கம்பற்றி, “யூத, கிருத்துவர்கள் தங்கள் மதபோதகர்கள், (அல்லாஹ்வால் ஹலால் என்று) அனுமதிக்கப்பட்டதை தடைசெய்தபோதும்; (அல்லாஹ்வால் ஹராம் என்று) தடுக்கப்பட்டதை அனுமதித்தபோதும் அவர்களுக்கு கட்டுப்பட்டனர். எனவே இது அவர்களை வணங்கியதாக ஆனது என்று அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அதாஉ பின் ஸாயிப் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34936)

حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، فِي قَوْلِهِ:

{اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ} [التوبة: 31] قَالَ: أَطَاعُوهُمْ فِيمَا أَمَرُوهُمْ بِهِ مِنْ تَحْرِيمِ حَلَالٍ وَتَحْلِيلِ حَرَامٍ , فَعَبَدُوهُمْ بِذَلِكَ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34936.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




3 . இந்தக் கருத்தில் அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34936 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-3095 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.