தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-20351

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(தவ்பா அத்தியாயத்தின்) “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31) எனும் வசனத்தின்படி யூத, கிருத்துவர்கள் தங்கள் மதபோதகர்களை வணங்கினார்களா? என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “இல்லை; என்றாலும் (அல்லாஹ்வால் ஹராம் என்று) தடுக்கப்பட்டதை மதபோதகர்கள் அனுமதித்தபோது அதை அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டார்கள்; (அல்லாஹ்வால் ஹலால் என்று) அனுமதிக்கப்பட்டதை மதபோதகர்கள் தடைசெய்தபோது அதை அவர்கள் தடை செய்துக் கொண்டார்கள். எனவே, மதபோதகர்கள் (அவர்களுக்கு) கடவுளர்கள் (போன்று) ஆகிவிட்டனர்” என்று பதிலளித்தார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இது அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாயிதா அவர்களின் வாக்கியமாகும்.

(பைஹகீ-குப்ரா: 20351)

أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ , أنبأ أَبُو عَبْدِ اللهِ بْنُ يَعْقُوبَ , ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ , أنبأ جَعْفَرُ بْنُ عَوْنٍ , عَنِ الْأَعْمَشِ ح وَأَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ , أنبأ أَبُو بَكْرٍ الْقَطَّانُ , ثنا عَلِيُّ بْنُ الْحَسَنِ الْهِلَالِيُّ , ثنا طَلْقُ بْنُ غَنَّامٍ , ثنا زَائِدَةُ، عَنِ الْأَعْمَشِ , عَنْ حَبِيبٍ , عَنْ أَبِي الْبَخْتَرِيِّ , قَالَ:

سُئِلَ حُذَيْفَةُ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ هَذِهِ الْآيَةِ: ” {اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونَ اللهِ} [التوبة: 31] , أَكَانُوا يُصَلُّونَ لَهُمْ؟ ” قَالَ: ” لَا , وَلَكِنَّهُمْ كَانُوا يُحِلُّونَ لَهُمْ مَا حُرِّمَ عَلَيْهِمْ , فَيَسْتَحِلُّونَهُ , وَيُحَرِّمُونَ عَلَيْهِمْ مَا أَحَلَّ اللهُ لَهُمْ , فَيُحَرِّمُونَهُ , فَصَارُوا بِذَلِكَ أَرْبَابًا “.

لَفْظُ حَدِيثِ زَائِدَةَ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-20351.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17564-அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) அவர்கள், ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்கவில்லை. இவ்வாறே மற்ற மூத்த நபித்தோழர்களிடமும் ஹதீஸைக் கேட்கவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி) போன்ற சிறு வயது நபித்தோழர்களிடம் மட்டுமே ஹதீஸைக் கேட்டுள்ளார்…

(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/154)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா பின் யமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஸுனன் ஸயீத் மன்ஸூர்-1012 , குப்ரா பைஹகீ-20351 , …

மேலும் பார்க்க: திர்மிதீ-3095 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.