தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5805

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும்போது எந்த ஆடைய அணிய வேண்டும் என்று தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், ‘(முழு நீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, தலைப்பாகைகள், முக்காடுள்ள மேலங்கிகள், (‘மோஸா’ எனும்) காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள்.

ஒருவரிடம் காலணிகள் இல்லையென்றால் அவர் மட்டும் காலுறைகளை (மோஸாக்களை) கணுக்கால்களுக்குக் கீழ் இருக்கும்படி அணிந்துகொள்ளட்டும். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள்’ என்று கூறினார்கள். 23

Book :77

(புகாரி: 5805)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ  نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ

قَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَأْمُرُنَا أَنْ نَلْبَسَ إِذَا أَحْرَمْنَا؟

قَالَ: «لاَ تَلْبَسُوا القَمِيصَ، وَالسَّرَاوِيلَ، وَالعَمَائِمَ، وَالبَرَانِسَ، وَالخِفَافَ، إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ لَيْسَ لَهُ نَعْلاَنِ فَلْيَلْبَسِ الخُفَّيْنِ أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ،

وَلاَ تَلْبَسُوا شَيْئًا مِنَ الثِّيَابِ مَسَّهُ زَعْفَرَانٌ وَلاَ وَرْسٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.