பாடம்:
ஒரு பெண், தன் கணவனின் பொருளை செலவிடுதல்.
எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவனின் அனுமதியின்றி தன்னுடைய கணவனின் வீட்டிலிருந்து எதையும் செலவு செய்யக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் தன்னுடைய உரையில் கூறியதை நான் செவியேற்றேன்.
அப்போது “அல்லாஹ்வின் தூதரே! உணவையும் வழங்கக் கூடாதா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அது தான் நம்முடைய செல்வங்களில் மிகச் சிறப்பானதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)
(திர்மிதி: 670)بَابٌ فِي نَفَقَةِ المَرْأَةِ مِنْ بَيْتِ زَوْجِهَا
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ الخَوْلَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خُطْبَتِهِ عَامَ حَجَّةِ الوَدَاعِ يَقُولُ: «لَا تُنْفِقُ امْرَأَةٌ شَيْئًا مِنْ بَيْتِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الطَّعَامُ، قَالَ: «ذَاكَ أَفْضَلُ أَمْوَالِنَا»
وَفِي البَابِ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَعَائِشَةَ.: «حَدِيثُ أَبِي أُمَامَةَ حَدِيثٌ حَسَنٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-606.
Tirmidhi-Shamila-670.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-606.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19124-ஷுரஹ்பீல் பின் முஸ்லிம் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் மட்டும் பலவீனமானவர் எனக் கூறியுள்ளார். அதற்கான காரணத்தைக் கூறவில்லை. - இப்னு ஹஸ்ம் அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும் , இஸ்மாயீல் பின் அய்யாஷ் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார். இப்னு ஹஸ்மின் கூற்று தவறு என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (நூல்: அத்தல்கீஸ் 3/105) - அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
போன்றோர் இவரை பலமானவர் என்றே கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். அல்காஷிஃப், தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்) - மேலும் இதில் வரும் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம் வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானது. மற்றவர்கள் வழியாக அறிவித்தால் பலவீனமானது என்ற சட்டத்தின் பிரகாரம் ஷுரஹ்பீல் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஷாம் வாசி என்பதால் அறிவிப்பாளர்தொடரில் குறையில்லை….
2 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> ஷுரஹ்பீல் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: (1) முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-16621 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-22085 , இப்னு மாஜா-2295 , திர்மிதீ-670 , அல்முஃஜமுல் கபீர்-7615 , குப்ரா பைஹகீ-7856 , (2) அஹ்மத்-22294 , அபூதாவூத்-3565 , …
மேலும் பார்க்க: அபூதாவூத்-3546 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-2211 , திர்மிதீ-1265 ,
சமீப விமர்சனங்கள்