தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5939

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 84

(அழகிற்காக) முகத்தின் முடியை நீக்கிக் கொள்ளும் பெண்கள்.124

 அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) அறிவித்தார்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) பச்சைகுத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிக் கொள்ளும் பெண்களையும் அழகிற்காக பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்களையும் (மொத்தத்தில்) அல்லாஹ் படைத்த உருவ அமைப்பை மாற்றும் பெண்களை சபித்தார்கள்.

(இதைக் கேள்விப்பட்ட) உம்மு யஅகூப் என்ற பெண், ‘என்ன இது (இவ்வாறெல்லாம் சபித்தீர்களாமே)?’ என்று கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரை சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான்  ஏன் சபிக்கக் கூடாது?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். (நீங்கள் குறிப்பிட்ட) அதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய்:

‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகி இருங்கள்’ (எனும் 59:7 வது வசனமே அது) என்று பதிலளித்தார்கள்.

Book : 77

(புகாரி: 5939)

بَابُ المُتَنَمِّصَاتِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ

«لَعَنَ عَبْدُ اللَّهِ، الوَاشِمَاتِ وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ»

فَقَالَتْ أُمُّ يَعْقُوبَ: مَا هَذَا؟ قَالَ عَبْدُ اللَّهِ: «وَمَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ، وَفِي كِتَابِ اللَّهِ؟»

قَالَتْ: وَاللَّهِ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وَجَدْتُهُ، قَالَ: ” وَاللَّهِ لَئِنْ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} [الحشر: 7]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.