தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3305

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

‘மக்காவை வெற்றி கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினால் பைத்துல் முகத்தஸில் இரண்டு ரக்அத் தொழுவதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன்’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இங்கே தொழு’ என்றார்கள். அந்த மனிதர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். ‘இங்கேயே தொழு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் உன் விருப்பப்படி செய்து கொள்’ என்றார்கள்.

(அபூதாவூத்: 3305)

بَابُ مَنْ نَذَرَ أَنْ يُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،

أَنَّ رَجُلًا، قَامَ يَوْمَ الْفَتْحِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَذَرْتُ لِلَّهِ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكَ مَكَّةَ، أَنْ أُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ رَكْعَتَيْنِ، قَالَ: «صَلِّ هَاهُنَا»، ثُمَّ أَعَادَ عَلَيْهِ، فَقَالَ: «صَلِّ هَاهُنَا»، ثُمَّ أَعَادَ عَلَيْهِ، فَقَالَ: «شَأْنُكَ إِذَنْ»

قَالَ أَبُو دَاوُدَ: رُوِيَ نَحْوُهُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2875.
Abu-Dawood-Shamila-3305.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2878.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11188-ஹபீப் முஅல்லிம் என்பவர் பற்றி, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் மட்டுமே (அந்தளவிற்கு) பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார். காரணம் யஹ்யா அல்கத்தான் அவர்கள் இவரிடமிருந்து ஹதீஸை அறிவிக்கமாட்டார் என்றும், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இவரிடமிருந்து ஹதீஸை அறிவிப்பார் என்பதால் தான். மற்ற அறிஞர்கள் இவரைப்பற்றி பலமானவர் என்றே கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-14919 , தாரிமீ-2384 , அபூதாவூத்-3305 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.