அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமண விருந்தை முதல்நாள் கொடுப்பது (ஸுன்னத்) நபிவழியாகும்; இரண்டுநாள் கொடுப்பது சிறப்பிற்குரியதாகும்; மூன்றுநாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11331)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ بْنِ سَوْرَةَ الْبَغْدَادِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ يُونُسَ بْنِ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ الْعَرْزَمِيُّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
طَعَامٌ فِي الْعُرْسِ يَوْمٌ: سُنَّةٌ، وَطَعَامُ يَوْمَيْنِ: فَضْلٌ، وَطَعَامُ ثَلَاثَةِ أَيَّامٍ: رِيَاءٌ وَسُمْعَةٌ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11331.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11175.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26325-அப்துல்லாஹ் பின் யூனுஸ் அறியப்படாதவர்; ராவீ-40965-முஹம்மது பின் உபைதுல்லாஹ் அல்அர்ஸமீ ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/637, தக்ரீபுத் தஹ்தீப்-1/874)
2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11331 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-1097 .
சமீப விமர்சனங்கள்