தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3375

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(திக்ர் எனும்) இறைதியானத்தின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

3297. அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்கள் எனக்கு அதிகமாகத் தென்படுகின்றன. (என் பலவீனத்தால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது). நான் அவற்றில் உறுதியாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறை ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என ஒரு மனிதர் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது நாவு இறைத்துதியால் (எப்போதும்) நனைந்தே இருக்கட்டும்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(திர்மிதி: 3375)

بَاب مَا جَاءَ فِي فَضْلِ الذِّكْرِ

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ،

أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ شَرَائِعَ الإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيَّ، فَأَخْبِرْنِي بِشَيْءٍ أَتَشَبَّثُ بِهِ، قَالَ: «لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3375.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3322.




  • இந்தச் செய்தியை அம்ர் பின் கைஸ் அவர்களிடமிருந்து முஆவியா பின் ஸாலிஹ் அறிவித்திருப்பதைப் போன்றே ஹஸ்ஸான் பின் நூஹ், இஸ்மாயீல் பின் அய்யாஷ், அய்யூப் பின் ஸயீத் ஆகியோரும் அறிவித்துள்ளனர்.
  • ஃகரீப் என்பதற்கு பல பொருள்கள் உள்ளது என்பதால் திர்மிதீ இமாம் அவர்களின் கூற்றின்படி இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளது என்று நினைத்து விடக்கூடாது.
  • இதில் திர்மிதீ இமாம் ஹஸன் என்று குறிப்பிடுவது “ஹஸன் லிதாதிஹீ” என்ற கருத்தில் ஆகும். திர்மிதீ இமாம் இதை மற்றவர்களிடம் உள்ள பொதுவான வழக்கில் கூறியுள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
  • திர்மிதீ இமாம் வெறும் ஹஸன் என்று கூறினால் அது ஹஸன் லிஃகைரிஹீ ஆகும். இது மற்ற அறிவிப்பாளர்தொடரிலும் வந்திருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. ஹஸன் என்பதுடன் ஃகரீப் என்பதையும் திர்மிதீ இமாம் இணைத்து கூறினால் அது அந்த நிபந்தனைக்கு பொருத்தமாகவில்லை. எனவே தான் ஃகரீப் என்பதுடன் ஹஸன் சேர்ந்துவரும் போது ஹஸன் லிதாதிஹீ என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க: அஹ்மத்-17680 .

1 comment on Tirmidhi-3375

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.