தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-512

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மழைத்தொழுகை (முறை பற்றி) எத்தனை ரக்அத்? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘இரண்டு ரக்அத்’ ஆகும் என்றும் குத்பாவுக்கு முன்பே தொழுகையை இமாம் ஆரம்பித்து இரண்டு ரக்அத் தொழ வைப்பார்கள். பின்பு நின்றவராக உரை (குத்பா) நிகழ்த்துவார். கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வார். இரண்டு ரக்அத்திலும் சப்தமிட்டு ‘கிராஅத்’ ஓதுவார். வலது புறப்பகுதியை இடப்புறத்திலும், இடப்புறத்தில் உள்ளதை வலது புறத்திலுமாக மேலாடையை போடுவதையே இமாம் மேலாடையை புரட்டிப் போட்டுக் கொள்வதாகும். இமாம் மேலாடையைப் புரட்டிப் போட்டுக் கொண்டதும் மக்களும் தங்கள் மேலாடையை புரட்டிப் போட்டுக் கொள்தல் வேண்டும். அவர்களும் உட்கார்ந்தவர்களாக கிப்லாவை முன்னோக்கி இருப்பார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள்.

(முஅத்தா மாலிக்: 512)

قَالَ يَحيَى:

وَسُئِلَ مَالِكٌ عَن صَلاَةِ الاِسْتِسْقَاءِ كَمْ هِيَ؟ فَقَالَ: رَكْعَتَانِ، وَلَكِنْ يَبْدَأُ الإِمَامُ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَخْطُبُ قَائِمًا وَيَدْعُو، وَيَسْتَقْبِلُ الْقِبْلَةَ، وَيُحَوِّلُ رِدَاءَهُ حِينَ يَسْتَقْبِلُ الْقِبْلَةَ، وَيَجْهَرُ فِي الرَّكْعَتَيْنِ بِالْقِرَاءَةِ، وَإِذَا حَوَّلَ رِدَاءَهُ جَعَلَ الَّذِي عَلَى يَمِينِهِ عَلَى شِمَالِهِ، وَالَّذِي عَلَى شِمَالِهِ عَلَى يَمِينِهِ، وَيُحَوِّلُ النَّاسُ أَرْدِيَتَهُمْ، إِذَا حَوَّلَ الإِمَامُ رِدَاءَهُ، وَيَسْتَقْبِلُونَ الْقِبْلَةَ، وَهُمْ قُعُودٌ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-512.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.