தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-2882

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(ஸுனன் தாரிமீ: 2882)

أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا عَبَّادٌ هُوَ ابْنُ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ شَهْرَ بْنَ حَوْشَبٍ، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-2882.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-2752.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2752-அப்பாத் பின் மன்ஸூர் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்றும், இறுதி காலத்தில் மூளை குழம்பியவர் என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/482)
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இவரின் செய்திகள் அந்தளவிற்கு பலமானதல்ல என்று விமர்சித்துள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/282)

மேலும் பார்க்க: திர்மிதீ-2066 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.