தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17182

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அல்லாஹ்விடத்தில் (கீழ்கண்ட) இந்த பரிசுகள் கிடைக்கும்.

1 . அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

2 . சொர்க்கத்தில் தனது இருப்பிடத்தைக் காண்பார்.

3 . ஈமான் என்னும் அணிகலன் அவருக்கு அணியப்படும்.

4 . அவருக்கு சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.

5 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.

5 . அவருக்கு சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.

6 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு பெறுவார்.

7 . அவரின் தலைக்கு மதிப்புமிக்க கிரீடம் அணிவிக்கப்படும். அதில் உள்ள ஒரு மாணிக்கக்கல் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விடவும் சிறந்ததாக இருக்கும்.

8 . அவருக்கு 72 சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.

9 . அவரின் உறவினர்களில் எழுபது பேருக்கு அவர் செய்யும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

இந்த செய்தி, இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் பின் நாஃபிஉ அவர்களின் அறிவிப்பில் 6 பரிசுகள் என்பதுடன், சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது.

(முஸ்னது அஹ்மத்: 17182)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، وَالْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ الْكِنْدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ – قَالَ الْحَكَمُ: سِتَّ خِصَالٍ – أَنْ يُغْفَرَ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ مِنْ دَمِهِ، وَيَرَى – قَالَ الْحَكَمُ: وَيُرَى – مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، وَيُحَلَّى حُلَّةَ الْإِيمَانِ، وَيُزَوَّجَ مِنَ الْحُورِ الْعِينِ، وَيُجَارَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَيَأْمَنَ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ – قَالَ الْحَكَمُ: يَوْمَ الْفَزَعِ الْأَكْبَرِ – وَيُوضَعَ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ، الْيَاقُوتَةُ مِنْهُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَيُزَوَّجَ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ، وَيُشَفَّعَ فِي سَبْعِينَ إِنْسَانًا مِنْ أَقَارِبِهِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17182.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16851.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம்வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானதாகும். பஹீர் பின் ஸஃத் ஷாம்வாசி என்பதால் இதன் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-1663 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.