அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அல்லாஹ்விடத்தில் ஒன்பது பரிசுகள் கிடைக்கும்.
1 . அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
2 . சொர்க்கத்தில் தனது இருப்பிடத்தைக் காண்பார்.
3 . ஈமான் என்னும் அணிகலன் அவருக்கு அணியப்படும்.
4 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.
5 . அவருக்கு சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.
6 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு பெறுவார்.
7 . அவரின் தலைக்கு மதிப்புமிக்க கிரீடம் அணிவிக்கப்படும். அதில் உள்ள ஒரு மாணிக்கக்கல் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விடவும் சிறந்ததாக இருக்கும்.
8 . அவருக்கு 72 சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.
9 . அவரின் உறவினர்களில் எழுபது பேருக்கு அவர் செய்யும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் ஒன்பது என்ற எண்ணிக்கையை யூகமாக அறிவிக்கிறார்.
(musannaf-abdur-razzaq-9559: 9559)عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ الْكِنْدِيِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ تِسْعَ خِصَالٍ – أَنَا أَشُكُّ – يَغْفِرُ اللَّهُ ذَنْبَهُ فِي أَوَّلِ دُفْعَةٍ مِنْ دَمِهِ، ويُرَى مِقْعَدُهُ مِنَ الْجَنَّةِ، وَيُحَلَّى بِحِلْيَةِ الْإِيمَانِ، وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَيُزَوَّجُ مِنَ الْحُورِ الْعِينِ، وَيُؤَمَّنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ، وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ، كُلُّ يَاقُوتَةٍ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَيُزَوَّجُ ثِنْتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنْ حُورِ الْعِينِ، وَيَشْفَعُ فِي سَبْعِينَ إِنْسَانًا مِنْ أَقَارِبِهِ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-9559.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-9324.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம்வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானதாகும். பஹீர் பின் ஸஃத் ஷாம்வாசி என்பதால் இதன் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.
- என்றாலும் இந்த செய்தியில் ஒன்பது என்ற எண்ணிக்கையை சந்தேகமாகக் கூறியிருப்பது இஸ்மாயீல் பின் அய்யாஷாக இருக்கலாம்.
- சில அறிவிப்பாளர்தொடரில் ஆறு என்றும் வந்துள்ளது…இதன்படி இதில் கூறப்பட்டுள்ள முதல் இரண்டு அம்சங்களை ஒன்றாக கணக்கிட்டும், 5வது, 8வது அம்சங்களை ஒன்றாக கணக்கிட்டும், 3வது, 7வது அம்சங்களை ஒன்றாக கணக்கிட்டும் பார்த்தால் ஆறு அம்சங்கள் என்று வரும்…
மேலும் பார்க்க: திர்மிதீ-1663 .
சமீப விமர்சனங்கள்