தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-2463

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கறுத்த நிறமுடையை மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் கறுத்த, நாற்றமுள்ள, அசிங்க முகம் கொண்ட மனிதன்; எனக்கு செல்வமும் இல்லை. நான் (போரில் எதிரிகளிடம்) சண்டையிட்டு கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்” என்று பதிலளித்தார்கள். அவர் சண்டையிட்டு அதில் கொல்லப்பட்டார். அவரிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், “உனது முகத்தை அல்லாஹ் வெண்மையாக்கிவிட்டான்; உனது வாசனையை நறுமணமாக்கிவிட்டான்; உனது செல்வத்தை அதிகமாக்கிவிட்டான்” என்று கூறினார்கள்.

மேலும் அவரின் விசயத்திலோ அல்லது மற்றவரின் விசயத்திலோ நபி (ஸல்) கூறினார்கள்:

அவரின் சொர்க்கத்து கண்ணழகி அவர் அணிந்திருக்கும் ஸூஃப் என்னும் கம்பளி ஆடையினுள் நுழைந்து அவரிடம் சண்டையிடுவதை நான் பார்த்தேன்.

(ஹாகிம்: 2463)

أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْعَنَزِيُّ، ثنا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، ثنا حَمَّادٌ، أَنْبَأَ ثَابِتٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ،

أَنَّ رَجُلًا أَسْوَدَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ أَسْوَدُ مُنْتِنُ الرِّيحِ، قَبِيحُ الْوَجْهِ، لَا مَالَ لِي، فَإِنْ أَنَا قَاتَلْتُ هَؤُلَاءِ حَتَّى أُقْتَلَ، فَأَيْنَ أَنَا؟ قَالَ: «فِي الْجَنَّةِ» فَقَاتَلَ حَتَّى قُتِلَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «قَدْ بَيَّضَ اللَّهُ وَجْهَكَ، وَطَيَّبَ رِيحَكَ، وَأَكْثَرَ مَالَكَ»

وَقَالَ لِهَذَا أَوْ لِغَيْرِهِ: «لَقَدْ رَأَيْتُ زَوْجَتَهُ مِنَ الْحُورِ الْعِينِ، نَازَعَتْهُ جُبَّةً لَهُ مِنْ صُوفٍ، تَدْخُلُ بَيْنَهُ وَبَيْنَ جُبَّتِهِ»

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2463.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-2395.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-5881-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் முஹம்மத் பின் அப்தூஸ்
    என்பவர் பற்றி ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் நம்பகமானவர் என்று கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் இவரைப் பற்றி நம்பிக்கைக்குரியவர்; சரியான அறிவிப்பாளர்தொடரை கூறுபவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா-297)

  • இந்த செய்தியை ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் சரியானது என்று கூறியுள்ளார். இதை ஆய்வு செய்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் சரியானது என்று கூறியுள்ளார். மேலும் தனது தாரீகுல் இஸ்லாம் என்ற நூலில் வேறு அறிவிப்பாளர்தொடரில் இந்த செய்தியை (தஃலீகாக-முஅம்மல் பின் இஸ்மாயீல் வழியாக) பதிவு செய்து சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-1/281)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-2463, பைஹகீ-தலாஇலுன் நுபுவ்வஹ்-1594 ,

1 comment on Hakim-2463

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.