…
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அனைத்து சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நான் வீட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் தன் கணவனைப் பற்றி முறையிட்டு வாக்குவாதம் செய்தார். அவள் கூறியதை நான் (சரியாக) கேட்கவில்லை. (ஆனால் அந்தப் பெண்ணிற்காக கண்ணியமும் மாண்பும் உடைய அல்லாஹ் விரைவாக) “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை இறக்கி அருளினான்.
அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)
(பைஹகீ-குப்ரா: 15242)45 – كِتَابُ الظِّهَارِ
بَابُ سَبَبِ نُزُولِ آيَةِ الظِّهَارِ
أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ الْأَصْبَهَانِيُّ، أنا أَبُو سَعِيدِ بْنُ الْأَعْرَابِيِّ، نا سَعْدَانُ بْنُ نَصْرٍ، نا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ لَقَدْ جَاءَتِ الْمُجَادِلَةُ تَشْتَكِي إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا فِي نَاحِيَةِ الْبَيْتِ مَا أَسْمَعُ مَا تَقُولُ , فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {قَدْ سَمِعَ اللهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا} [المجادلة: 1]
أَخْرَجَهُ الْبُخَارِيُّ فِي الصَّحِيحِ فَقَالَ: وَقَالَ الْأَعْمَشُ عَنْ تَمِيمٍ فَذَكَرَهُ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-15242.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-14056.
சமீப விமர்சனங்கள்