தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-14785

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (செல்லும் வழியில்) ஒரு பெண்ணை கடந்து சென்றார்கள். (அதைக் கண்ட) அந்த பெண் அவர்களுக்காக ஒரு ஆட்டை அறுத்து உணவு ஏற்பாடு செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த பாதை வழியாக) திரும்பி வந்த சமயம், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக உணவு ஏற்பாடு செய்துள்ளோம். வாருங்கள்; சாப்பிடுங்கள்! என்று அந்தப் பெண் விருந்துக்கு அழைத்தார். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (அந்தப் பெண்ணின் வீட்டிற்குள்) நுழைந்தனர். நபி (ஸல்) அவர்கள் உண்ண ஆரம்பிப்பதற்கு முன் நபித்தோழர்கள் உண்ணமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு கவளத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் அதை அவர்களால் விழுங்க முடியவில்லை. அப்போது “இந்த ஆடு அதனின் உரிமையாளர் அனுமதியின்றி அறுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அதற்கு அந்தப் பெண், அல்லாஹ்வின் தூதரே! ஸஃத் பின் முஆத் குடும்பத்தாரிடமிருந்து (அனுமதியின்றி) எடுத்துக்கொள்வதற்கு நாங்கள் வெட்கப்படமாட்டோம். அவர்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்வதற்கு வெட்கப்படமாட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களிடமிருந்து அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று விளக்கம் கூறினார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 14785)

حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ جَابِرٍ بْنَ عَبْدِ اللَّهِ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ مَرُّوا بِامْرَأَةٍ، فَذَبَحَتْ لَهُمْ شَاةً، وَاتَّخَذَتْ لَهُمْ طَعَامًا، فَلَمَّا رَجَعَ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا اتَّخَذْنَا لَكُمْ طَعَامًا، فَادْخُلُوا فَكُلُوا، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ، وَكَانُوا لَا يَبْدَءُونَ حَتَّى يَبْتَدِئَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لُقْمَةً، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُسِيغَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ شَاةٌ ذُبِحَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا» ، فَقَالَتِ الْمَرْأَةُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّا لَا نَحْتَشِمُ مِنْ آلِ سَعْدِ بْنِ مُعَاذٍ، وَلَا يَحْتَشِمُونَ مِنَّا، نَأْخُذُ مِنْهُمْ، وَيَأْخُذُونَ مِنَّا


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-14785.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-14492.




1 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-14785 , ஹாகிம்-7579 ,

2 . ஒரு அன்ஸாரி நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3332 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.