அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (செல்லும் வழியில்) ஒரு பெண்ணை கடந்து சென்றார்கள். (அதைக் கண்ட) அந்த பெண் அவர்களுக்காக ஒரு ஆட்டை அறுத்து உணவு ஏற்பாடு செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த பாதை வழியாக) திரும்பி வந்த சமயம், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக உணவு ஏற்பாடு செய்துள்ளோம். வாருங்கள்; சாப்பிடுங்கள்! என்று அந்தப் பெண் விருந்துக்கு அழைத்தார். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (அந்தப் பெண்ணின் வீட்டிற்குள்) நுழைந்தனர். நபி (ஸல்) அவர்கள் உண்ண ஆரம்பிப்பதற்கு முன் நபித்தோழர்கள் உண்ணமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு கவளத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் அதை அவர்களால் விழுங்க முடியவில்லை. அப்போது “இந்த ஆடு அதனின் உரிமையாளர் அனுமதியின்றி அறுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அந்தப் பெண், அல்லாஹ்வின் தூதரே! ஸஃத் பின் முஆத் குடும்பத்தாரிடமிருந்து (அனுமதியின்றி) எடுத்துக் கொள்வதற்கு நாங்கள் வெட்கப்படமாட்டோம். அவர்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்வதற்கு வெட்கப்படமாட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களிடமிருந்து அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று விளக்கம் கூறினார்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(ஹாகிம்: 7579)أَخْبَرَنَا أَبُو عَوْنٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَاهَانَ الْخَزَّازُ، بِمَكَّةَ عَلَى الصَّفَا، ثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ مَرُّوا بِامْرَأَةٍ فَذَبَحَتْ لَهُمْ شَاةً وَاتَّخَذَتْ لَهُمْ طَعَامًا فَلَمَّا رَجَعَ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا اتَّخَذْنَا لَكُمْ طَعَامًا فَادْخُلُوا فَكُلُوا، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ وَكَانُوا لَا يَبْدَءُونَ حَتَّى يَبْدَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ لُقْمَةً فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُسِيغَهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ شَاةٌ ذُبِحَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا» فَقَالَتِ الْمَرْأَةُ: يَا نَبِيَّ اللَّهِ إِنَّا لَا نَحْتَشِمُ مِنْ آلِ مُعَاذٍ وَلَا يَحْتَشِمُونَ مِنَّا، إِنَّا نَأْخُذُ مِنْهُمْ وَيَأْخُذُونَ مِنَّا
«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7579.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7642.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36423-அபூஅவ்ன்–முஹம்மது பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மாஹான் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இவரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் இடம்பெறும் செய்திகளில் இவரை விமர்சிக்கவில்லை. ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் ஆசிரியர்களைப் பற்றிய குறிப்புகளை தொகுத்துள்ள அபுத்தய்யிப் அவர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸிகாத்-9/145, அள்ளயீஃபா-4251, இத்ஹாஃபுல் மஹரா, அர்ரவ்ளுல் பாஸிம்-770)
மேலும் பார்க்க: அஹ்மத்-14785 .
சமீப விமர்சனங்கள்