தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4278

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த சமுதாயம் (அல்லாஹ்வின்) அருளுக்குரிய-இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு (நிரந்தர) வேதனை இல்லை. உலகிலேயே அதற்கு குழப்பத்தில்; நிலநடுக்கத்தில் மாட்டிக்கொள்ளுதல்; கொல்லப்படுதல் போன்றவற்றால் வேதனை செய்யப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

(அபூதாவூத்: 4278)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ، لَيْسَ عَلَيْهَا عَذَابٌ فِي الْآخِرَةِ، عَذَابُهَا فِي الدُّنْيَا الْفِتَنُ، وَالزَّلَازِلُ، وَالْقَتْلُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4278.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3732.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21956-அல்மஸ்வூதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் கொள்ளுப் பேரன்) கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இவர் மூளைக்குழம்புவதற்கு முன் கூஃபாவிலும், பஸராவிலும் இவரிடமிருந்து செவியேற்றவர்கள் வழியாக வரும் செய்தி சரியானது என அபூநுஐம் அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/282)

  • பக்தாதில் இவரிடமிருந்து செவியேற்று அறிவிப்பவர்கள் வழியாக வரும் செய்திகள் பலவீனமானது. (நூல்: தக்ரீபுத் தஹ்தீபு 1/586)

…அத்தப்ஸிரா-2/340 ….அல்இக்திபாத்-62 பக்கம்-205…)

ராவீ-34551-கஸீர் பின் ஹிஷாம் பக்தாதைச் சேர்ந்தவர். என்றாலும் இந்த செய்தியை அல்மஸ்வூதீ அவர்களிடமிருந்து பஸராவில் செவியேற்ற முஆத் பின் முஆத், ஹம்மாம் பின் யஹ்யா போன்றோரும் அறிவித்துள்ளனர்…

இந்த செய்தியை சிலர் பலவீனமானது என்றும் சிலர் சரியானது என்றும் கூறியுள்ளனர். ஆனால் சரியானது என்று கூறக்கூடியவர்களின் ஆதாரமே பலமாக உள்ளது…

(ஆய்வுக்காக: إِنَّ هَذِهِ الأُمةُ مَرحُومَةٌ .

1 . இந்தக் கருத்தில் அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூபுர்தா பின் அபூமூஸா  —> அபூமூஸா (ரலி) 

பார்க்க: அஹ்மத்-19678 , 19752 , அபூதாவூத்-4278 , முஸ்னத் பஸ்ஸார்-3099 , முஸ்னத் அபீ யஃலா-7277 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4055 , ஹாகிம்-8372 ,

  • பக்தரீ பின் முக்தார் —> அபூபுர்தா , அபூபக்ர் பின் அபூமூஸா —>  அபூமூஸா (ரலி) 

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3090 ,

2 . அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-268 .

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6909 .

4 . ஒரு நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-7649 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.