ஒரு முஸ்லிம் அல்லது ஒரு மனிதன் அல்லது ஒரு அடியார் காலையிலும், மாலையிலும், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” என மூன்றுத் தடவைக் கூறினால் மறுமை நாளில் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான அபூஸலாம்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 26541)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، عَنْ سَابِقٍ، عَنْ أَبِي سَلَامٍ، خَادِمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
مَا مِنْ مُسْلِمٍ أَوْ إِنْسَانٍ أَوْ عَبْدٍ يَقُولُ حِينَ يُمْسِي وَيُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ: رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا «ثَلَاثَ مَرَّاتٍ ,» إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-26541.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-28706.
- இந்த செய்தி சில பதிப்புகளில் மர்ஃபூவாக வந்துள்ளது. எனவே இந்த பதிப்பில் மேற்கண்டவாறு வந்திருப்பது தவறாகும்.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16665-ஸாபிக் பின் நாஜியா பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அபூஅகீல்-ஹாஷிம் பின் பிலால் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் இவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/674)
மேலும் இந்த அறிவிப்பாளர்தொடர் குளறுபடியாகவும் வந்துள்ளது.
மேலும் பார்க்க: அபூதாவூத்-5072 .
சமீப விமர்சனங்கள்