அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஒரு கிராமவாசி வந்தார். அவர் நல்ல வேலைப்பாடு செய்யப்பட்ட, பட்டன் உள்ள பச்சைநிற, நீளமான பட்டாடையை அணிந்திருந்தார். மேலும் அவர், உங்களின் இந்தத் தோழர் பாரசீகர்களை அடக்கிவிட்டார். ஆடுமேய்க்கும் இந்த அரபுகளை மேலோங்கச் செய்து விட்டார் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரின் ஆடையை பிடித்திழுத்து, “உன் மீது அறிவில்லாதோரின் ஆடையைக் காண்கிறேனே!” (அவ்வாறு இனிமேல் நான் காணக்கூடாது) என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (எங்களுக்கு) கூறினார்கள்:
நூஹ் (அலை) அவர்கள், மரணம் நெருங்கியபோது தனது மகனிடம், நான் உனக்கு மரணசாசன உபதேசம் செய்கிறேன். இரண்டு விசயத்தை உனக்கு கட்டளையிடுகிறேன். இரண்டு விசயத்தை விட்டு உன்னை தடுக்கிறேன் என்று கூறினார்கள். அவைகள்:
1 . லாஇலாஹ இல்லல்லாஹ் (என்று கூறியும்),
2 . ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ என்று கூறியும் அல்லாஹ்வை துதிசெய்வதை உனக்கு கட்டளையிடுகிறேன்.
ஏனெனில் ஏழு வானங்களையும், ஏழு பூமிகளையும் தராசின் ஒரு தட்டிலும், லாஇலாஹ இல்லல்லாஹ்வை மற்றொரு தட்டிலும் வைத்தால், லாஇலாஹஇல்லல்லாஹ்வுடைய தட்டுதான் கனத்தால் கீழே தாழ்ந்துவிடும்.
மேலும் ஏழு வானங்களும், ஏழு பூமிகளும் எந்த வடுவும் இல்லாத ஒரே வளையமாக இருந்தாலும் அதில் லாஇலாஹ இல்லல்லாஹ்வை வைத்தால் அது இரண்டாக பிளந்துவிடும்.
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ என்பது அனைத்து பொருட்களின் தொழுகையாகும். இதன்மூலமே படைப்பினங்கள் ரிஸ்க் எனும் வாழ்வாதாராம் அளிக்கப்படுகிறார்கள்.
1 . இணைவைப்பதை விட்டும்,
2 . பெருமையடிப்பதை விட்டும் உன்னை நான் தடுக்கிறேன்.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இணைவைப்பு என்னவென்பதை நாங்கள் அறிவோம். பெருமை என்றால் என்ன? எங்களிடம் இரு அழகிய வார் கொண்ட, காலணிகள் இருப்பதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள்.
எங்களிடம் நல்ல ஆடை இருப்பதா? என்று கேட்கப்பட்டது. அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள்.
எங்களிடம் நல்ல வாகனம் இருப்பதா? என்று கேட்கப்பட்டது. அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள். எங்களுடன் அமர்ந்து உரையாடும் நண்பர்கள் இருப்பதா? என்று கேட்கப்பட்டது. அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள்.
அவ்வாறெனில் பெருமை என்றால் என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையை மறுப்பதும், மக்களை கேவலமாக கருதுவதும் பெருமையாகும்” என்று பதிலளித்தார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 6583)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الصَّقْعَبِ بْنِ زُهَيْرٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ حَمَّادٌ، أَظُنُّهُ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:
كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، عَلَيْهِ جُبَّةٌ سِيجَانٍ مَزْرُورَةٌ بِالدِّيبَاجِ، فَقَالَ: أَلَا إِنَّ صَاحِبَكُمْ هَذَا قَدْ وَضَعَ كُلَّ فَارِسٍ ابْنِ فَارِسٍ قَالَ: يُرِيدُ أَنْ يَضَعَ كُلَّ فَارِسٍ ابْنِ فَارِسٍ، وَيَرْفَعَ كُلَّ رَاعٍ ابْنِ رَاعٍ قَالَ: فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَجَامِعِ جُبَّتِهِ، وَقَالَ: «أَلَا أَرَى عَلَيْكَ لِبَاسَ مَنْ لَا يَعْقِلُ»
ثُمَّ قَالَ: ” إِنَّ نَبِيَّ اللَّهِ نُوحًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ لِابْنِهِ: إِنِّي قَاصٌّ عَلَيْكَ الْوَصِيَّةَ: آمُرُكَ بِاثْنَتَيْنِ، وَأَنْهَاكَ عَنِ اثْنَتَيْنِ،
آمُرُكَ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِنَّ السَّمَوَاتِ السَّبْعَ، وَالْأَرْضِينَ السَّبْعَ، لَوْ وُضِعَتْ فِي كِفَّةٍ، وَوُضِعَتْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي كِفَّةٍ، رَجَحَتْ بِهِنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَلَوْ أَنَّ السَّمَوَاتِ السَّبْعَ، وَالْأَرْضِينَ السَّبْعَ، كُنَّ حَلْقَةً مُبْهَمَةً، قَصَمَتْهُنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ،
وَسُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فَإِنَّهَا صَلَاةُ كُلِّ شَيْءٍ، وَبِهَا يُرْزَقُ الْخَلْقُ،
وَأَنْهَاكَ عَنِ الشِّرْكِ وَالْكِبْرِ ” قَالَ: قُلْتُ أَوْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ: هَذَا الشِّرْكُ قَدْ عَرَفْنَاهُ، فَمَا الْكِبْرُ؟ قَالَ: الْكِبْرُ أَنْ يَكُونَ لِأَحَدِنَا نَعْلَانِ حَسَنَتَانِ لَهُمَا شِرَاكَانِ حَسَنَانِ قَالَ: «لَا» قَالَ: هُوَ أَنْ يَكُونَ لِأَحَدِنَا حُلَّةٌ يَلْبَسُهَا؟ قَالَ: «لَا» قَالَ: الْكِبْرُ هُوَ أَنْ يَكُونَ لِأَحَدِنَا دَابَّةٌ يَرْكَبُهَا؟ قَالَ: «لَا» قَالَ: أَفَهُوَ أَنْ يَكُونَ لِأَحَدِنَا أَصْحَابٌ يَجْلِسُونَ إِلَيْهِ؟ قَالَ: «لَا» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا الْكِبْرُ؟ قَالَ: «سَفَهُ الْحَقِّ، وَغَمْصُ النَّاسِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6583.
Musnad-Ahmad-Alamiah-6295.
Musnad-Ahmad-JawamiulKalim-6404.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-6583, 7101, அல்அதபுல் முஃப்ரத்-, முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-147,
சமீப விமர்சனங்கள்