அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும். (அப்போது) உங்களிடத்தில் சில அறிவற்ற தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் மக்களில் தீயவர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். தொழுகையைத் அதற்குரிய நேரத்தில் தொழுவதை விட்டுவிட்டு, தாமதப்படுத்தித் தொழுவார்கள். எனவே உங்களில் ஒருவர் அவர்கள் காலத்தில் வாழ்ந்தால் அவர்களுக்காக அறங்காவலராகவோ, காவலராகவோ, வரி வசூலிப்பவராகவோ, பொருளாளராகவோ இருக்க வேண்டாம்.
அறிவிப்பவர்கள்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி)
(abi-yala-1115: 1115)حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ رَقَبَةَ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ سُفَهَاءُ يُقَدِّمُونَ شِرَارَ النَّاسِ، وَيَظْهَرُونَ بِخِيَارِهِمْ، وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا، فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ، فَلَا يَكُونَنَّ عَرِيفًا وَلَا شُرْطِيًّا وَلَا جَابِيًا وَلَا خَازِنًا»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-1115.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-1100.
சமீப விமர்சனங்கள்