உலூச் செய்யும் முறை பற்றி இப்னு அபி முலைக்கா அவர்களிடம் வினவப்பட்டபோது, அவர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் உலூச் செய்யும் முறை பற்றி வினவப்பட்டது. அப்போது அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிச் சொன்னார்கள். அவர்களிடம் ஒரு தண்ணீர் பாத்திரம் கொண்டு வரப்பட்டதும் அதை தனது வலது கையில் சாய்த்து (நீர் விட்டு கழுவிய பின்) கையை தண்ணீர் பாத்திரத்திற்குள் செலுத்தி மூன்று முறை வாய் கொப்பளித்தார்கள். மும்முறை நாசிக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தார்கள். மும்முறை முகத்தை கழுவினார்கள். பின்பு மூன்று முறை வலது கையையும்,. மூன்று முறை இடது கையையும் கழுவினார்கள். பின்பு கையை தண்ணீருள் செலுத்தி தண்ணீர் எடுத்து தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள் (காதுகளுக்கு மஸஹ் செய்யும் போது) காதுகளின் உட்புறம் வெளிப்புறமும் ஒரு தடவை கழுவினார்கள். பின்பு இரு கால்களையும் கழுவினார்கள். பிறகு உலூவின் முறை பற்றி கேட்டவர் எங்கே? (என்று வினவி) இவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன் என்று உஸ்மான் பின் அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் அத்தைமியி
(உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்ற சஹீஹான அனைத்து ஹதீஸ்களும் தலைக்கு ஒரு முறை தான் மஸஹ் செய்யவேண்டும் என அறிவிக் கின்றன. ஏனெனில் மற்ற உறுப்புக்களை மும்முறை கழுவி உலூச் செய்யவேண்டும் என்றே அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றனர். அந்த அறிவிப்புக்களில் தலைக்கு மஸஹ் செய்தார்கள் என்றே (எண்ணிக்கையை குறிப்பிடாமல்) அறிவிக்கின்றனர். மற்றவை களுக்கு எண்ணிக்கையை குறிப்பிட்டது போல இதற்கு எண்ணிக்கையை குறிப்பிடவில்லை.)
(அபூதாவூத்: 108)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ الْإِسْكَنْدَرَانِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ يُونُسَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ زِيَادٍ الْمُؤَذِّنُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، قَالَ:
سُئِلَ ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْوُضُوءِ، فَقَالَ: رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ سُئِلَ عَنِ الْوُضُوءِ «فَدَعَا بِمَاءٍ، فَأُتِيَ بِمِيضَأَةٍ فَأَصْغَاهَا عَلَى يَدِهِ الْيُمْنَى، ثُمَّ أَدْخَلَهَا فِي الْمَاءِ فَتَمَضْمَضَ ثَلَاثًا، وَاسْتَنْثَرَ [ص:27] ثَلَاثًا، وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الْيُسْرَى ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَأَخَذَ مَاءً فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ، فَغَسَلَ بُطُونَهُمَا وَظُهُورَهُمَا مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»، ثُمَّ قَالَ: أَيْنَ السَّائِلُونَ عَنِ الْوُضُوءِ؟ «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ»
قَالَ أَبُو دَاوُدَ: ” أَحَادِيثُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ الصِّحَاحُ كُلُّهَا تَدُلُّ عَلَى مَسْحِ الرَّأْسِ أَنَّهُ مَرَّةً، فَإِنَّهُمْ ذَكَرُوا الْوُضُوءَ ثَلَاثًا، وَقَالُوا فِيهَا: وَمَسَحَ رَأْسَهُ وَلَمْ يَذْكُرُوا عَدَدًا كَمَا ذَكَرُوا فِي غَيْرِهِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-108.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்