தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1298

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நீ என்னிடம் நாளை வா! நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன்; உனக்கு நன்மையைத் தருகிறேன்; உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன் என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன்.

(அப்போது) பகல் சாயும் போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு! பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10 தடவைகள், அல்ஹம்து லில்லாஹ் 10 தடவைகள், அல்லாஹு அக்பர் 10 தடவைகள், லாயிலாஹ இல்லல்லாஹ் 10 தடவைகள் கூறாமல் எழாதே! பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்!

இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப் பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் இவ்வாறு செய்தால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள். நான் அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்? என்று கேட்டதற்கு பகலில் அல்லது இரவில் ஏதாவது ஒரு நேரத்தில் தொழுது கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 

அபூதாவூத் கூறுகிறார்:

  1. ஹப்பான் பின் ஹிலால் என்பவர் ஹிலால் அர்ரஃயீ என்ற ஹிலால் பின் யஹ்யா அல்பஸரீ என்பவரின் தாய்மாமன் ஆவார்.
  2. அபுல் ஜவ்ஸா-விடமிருந்து முஸ்தமிர் என்பவர், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) யின் சொல்லாக அறிவிக்கிறார்.
  3. ரவ்ஹு பின் முஸய்யப், ஜஃபர் பின் ஸுலைமான் போன்றோர்—அம்ர் பின் மாலிக்—அபுல் ஜவ்ஸா—இப்னு அப்பாஸ் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கின்றனர்.
  4. ரவ்ஹின் அறிவிப்பில் இந்த செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி),  நபி (ஸல்) சொல்லாக அறிவித்ததாக இடம்பெற்றுள்ளது.
(அபூதாவூத்: 1298)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُفْيَانَ الْأُبُلِّيُّ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ أَبُو حَبِيبٍ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مَالِكٍ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، قَالَ: حَدَّثَنِي رَجُلٌ كَانَتْ لَهُ صُحْبَةٌ يَرَوْنَ أَنَّهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ:

قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتِنِي غَدًا أَحْبُوكَ، وَأُثِيبُكَ، وَأُعْطِيكَ» حَتَّى ظَنَنْتُ أَنَّهُ يُعْطِينِي عَطِيَّةً، قَالَ: «إِذَا زَالَ النَّهَارُ، فَقُمْ فَصَلِّ أَرْبَعَ رَكَعَاتٍ»، فَذَكَرَ نَحْوَهُ، قَالَ: «ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ يَعْنِي مِنَ السَّجْدَةِ الثَّانِيَةِ، فَاسْتَوِ جَالِسًا، وَلَا تَقُمْ حَتَّى تُسَبِّحَ عَشْرًا، وَتَحْمَدَ عَشْرًا، وَتُكَبِّرَ عَشْرًا، وَتُهَلِّلَ عَشْرًا، ثُمَّ تَصْنَعَ ذَلِكَ فِي الْأَرْبَعِ الرَّكَعَاتِ»، قَالَ: «فَإِنَّكَ لَوْ كُنْتَ أَعْظَمَ أَهْلِ الْأَرْضِ ذَنْبًا غُفِرَ لَكَ بِذَلِكَ»، قُلْتُ: فَإِنْ لَمْ أَسْتَطِعْ أَنْ أُصَلِّيَهَا تِلْكَ السَّاعَةَ؟ قَالَ «صَلِّهَا مِنَ اللَّيْلِ وَالنَّهَارِ»،

قَالَ أَبُو دَاوُدَ: «حَبَّانُ بْنُ هِلَالٍ خَالُ هِلَالٍ الرَّأْيِ»،
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ الْمُسْتَمِرُّ بْنُ الرَّيَّانِ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو مَوْقُوفًا، وَرَوَاهُ رَوْحُ بْنُ الْمُسَيَّبِ، وَجَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ النُّكْرِيِّ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَوْلُهُ، وَقَالَ فِي حَدِيثِ رَوْحٍ، فَقَالَ حَدِيثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1298.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1106.




إسناد ضعيف فيه عمرو بن مالك النكري وهو ضعيف الحديث

இதன் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் அம்ர் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அந்நுக்ரீ
, பஸரீ என்பவர் நம்பகமானவர்களிடமிருந்து மறுக்கப்படவேண்டிய செய்திகளை அறிவிப்பவர். மேலும் ஹதீஸ்களைத் திருடுபவர், இவரை அபூயஃலா அவர்கள், பலவீனமானவர் என்று கூற நான் கேட்டுள்ளேன் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(நூல் : அல் காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம் : 6, பக்கம் : 258)

سمعت أبا يعلى يقول : عمرو بن مالك النكري كان ضعيفا .
الكامل في الضعفاء: (6 / 258)

  1. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : குப்ரா பைஹகீ-4919 .

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : அபூதாவூத்-1297 .

3 . ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்-5004 ,

4 . அன்ஸாரி ஒருவர் வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : அபூதாவூத்-1299 .

5 . அபூ ராஃபிஉ (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : திர்மிதீ-482 .

6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : ஹாகிம்-1196 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.