தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1196

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள், ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டியணைத்தார்கள், இரு கண்களுக்கு இடையில் முத்தமிட்டார்கள். பின்னர் உமக்கு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கை தரவா? என்று கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன்.

நான்கு ரக்அத்கள் தொழு! அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும், ஒரு (துணை) அத்தியாயத்தையும் ஓது! பின்னர் ஓதி முடித்ததும் நின்ற நிலையில் ருகூவுக்கு முன்னர் ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று 15 தடவைகள் கூறு! பின்னர் ருகூவு செய்! பின்னர் அதை 10 தடவைகள் கூறு! பின்னர் ருகூவில் இருந்து எழுந்து அதை 10 தடவைகள் கூறு! இரண்டாம் ரக்அத்தைத் துவங்குவதற்கு முன்னர் இந்த ரக்அத் முழுவதற்கும் இவ்வாறே செய்து கொள்! நான்கு ரக்அத்துகளை நீ முடிக்கின்ற வரை நான் வர்ணித்ததைப் போன்று (மீதமுள்ள) மூன்று ரக்அத்திலும் (இவ்வாறே செய்!

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(ஹாகிம்: 1196)

حَدَّثَنَاهُ أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ إِمْلَاءً مِنْ أَصْلِ كِتَابِهِ ، ثنا أَحْمَدُ بْنُ دَاوُدَ بْنِ عَبْدِ الْغَفَّارِ بِمِصْرَ ، ثنا إِسْحَاقُ بْنُ كَامِلٍ ، ثنا إِدْرِيسُ بْنُ يَحْيَى ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ :

وَجَّهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ إِلَى بِلَادِ الْحَبَشَةِ ، فَلَمَّا قَدِمَ اعْتَنَقَهُ وَقَبَّلَ بَيْنَ عَيْنَيْهِ ، ثُمَّ قَالَ : أَلَا أَهَبُ لَكَ ، أَلَا أُبَشِّرُكَ ، أَلَا أَمْنَحُكَ ، أَلَا أُتْحِفُكَ ؟ قَالَ : نَعَمْ ، يَا رَسُولَ اللَّهِ . قَالَ : تُصَلِّي أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ بِالْحَمْدِ وَسُورَةٍ ، ثُمَّ تَقُولُ بَعْدَ الْقِرَاءَةِ وَأَنْتَ قَائِمٌ قَبْلَ الرُّكُوعِ : سُبْحَانَ اللَّهِ ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ خَمْسَ عَشْرَةَ مَرَّةً ، ثُمَّ تَرْكَعُ فَتَقُولُهُنَّ عَشْرًا تَمَامَ هَذِهِ الرَّكْعَةِ قَبْلَ أَنْ تَبْتَدِئَ بِالرَّكْعَةِ الثَّانِيَةِ ، تَفْعَلُ فِي الثَّلَاثِ رَكَعَاتٍ كَمَا وَصَفْتَ لَكَ حَتَّى تُتِمَّ أَرْبَعَ رَكَعَاتٍ

هَذَا إِسْنَادٌ صَحِيحٌ لَا غُبَارَ عَلَيْهِ ، وَمِمَّا يُسْتَدَلُّ بِهِ عَلَى صِحَّةِ هَذَا الْحَدِيثِ اسْتِعْمَالُ الْأَئِمَّةِ مِنْ أَتْبَاعِ التَّابِعِينَ إِلَى عَصْرِنَا هَذَا إِيَّاهُ وَمَوَاظَبَتُهُمْ عَلَيْهِ وَتَعْلِيمُهُنَّ النَّاسَ ، مِنْهُمْ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1196.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1127.




  • இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் இது ஆதாரப்பூர்வமானது; இதன் மீது எந்தப் புழுதியும் படியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்களின் நூலின் அறிவிப்பாளர் தொடரை மேலாய்வு செய்யும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    கூற்றை வழிமொழிகிறார்.
  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்களும், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் கூறுவது கவனக் குறைவால் ஏற்பட்ட முடிவாகும்.
  • இச்செய்தியில் ஏழாவது அறிவிப்பாளராக இடம்பெறும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார்
    என்பவர் பெரும் பொய்யரும், ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூறுபவருமாவார்.
  • இந்த ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்துள்ள தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களே தமது மீஸானுல் இஃதிதால் எனும் நூலில் தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    மற்றும் சில அறிஞர்கள் இவரைப் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியுள்ளனர் என்று விமர்சித்துள்ளார்கள். அதை மறந்து விட்டு இந்த ஹதீஸ் சரியானது என்கிறார். நூல்: மீஸானுல் இஃதிதால் 1/96
  • ஹாபிள் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பவரைப் பற்றி கூறுவதாவது:

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் தாவூத்
என்பவர் முற்றிலும் பலவீனமானவராவார். இவரைப் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று (ஹதீஸ் கலை வல்லுனர்கள்) குற்றம் சுமத்தியுள்ளனர். நூல் : லிஸானுல் மீஸான் 1/454.

كذبه الدارقطني وغيره
لسان الميزان: (1 / 454)

  1. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : குப்ரா பைஹகீ-4919 .

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : அபூதாவூத்-1297 .

3 . ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்-5004 ,

4 . அன்ஸாரி ஒருவர் வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : அபூதாவூத்-1299 .

5 . அபூ ராஃபிஉ (ரலி) வழியாக வரும் செய்திகள் :

பார்க்க : திர்மிதீ-482 .

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.