தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1346

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நள்ளிரவுத் தொழுகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை கூட்டாக தொழுதுவிட்டு, அதன் பின் தம் குடும்பத்தாரிடம் வந்து, நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் பின் படுக்கைக்கு வந்து, தூங்கி விடுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ய அவர்களின் தலைக்கு அருகில் பல் துலக்கும் குச்சி, தண்ணீர் உள்ளிட்டவை மூடி வைக்கப்பட்டிருக்கும். அவர்களை அல்லாஹ் இரவில் எழுப்ப நாடும்போது எழுவார்கள். (எழுந்த பின்) பல் துலக்கி அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்வார்கள்.

பின்பு தொழும் இடத்திற்கு வந்து, எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். ‘அல்ஃபாத்திஹா’ எனும் அத்தியாயத்தையும், குர்ஆனிலிருந்து சில அத்தியாயங்களையும், அல்லாஹ் நாடிய அளவு ஓதுவார்கள். இவற்றில் எந்த ரக்அத்திலும் (அத்தஹியாத்திற்கு) உட்கார மாட்டார்கள்.  எட்டாவது ரக்அத்தில்தான் அமர்வார்கள். ஆனால், ஸலாம் கொடுக்க மாட்டார்கள்.
ஒன்பதாவது ரக்அத்திற்கு (எழுந்து) குர்ஆன் வசனங்களை ஓதிய பின்பு அமர்ந்து அல்லாஹ் நாடும் அளவு பிரார்த்திப்பார்கள். அல்லாஹ்விடம் தம் தேவைகளைக் கேட்பார்கள். அல்லாஹ்வின் பக்கம் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். குடும்பத்தினர் (தூக்கத்திலிருந்து) விழிக்கும் அளவுக்குக் குரல் உயர்த்தி ஒரு ஸலாம் கொடுப்பார்கள்.

அதன் பின் (இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.) உட்கார்ந்து அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதி உட்கார்ந்தே ருகூஉக்குக் குனிவார்கள். பின்பு இரண்டாவது ரக்அத்தில் உட்கார்ந்தே ஓதி, குனிந்து, சிரம்பணிவார்கள். பின்பு அல்லாஹ் நாடும் அளவு பிரார்த்திப்பார்கள். பின்பு ஸலாம் கொடுத்துத் தொழுகையை முடிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்களுடைய உடல் பருமனாக ஆகும்வரை இவ்வாறு தொழுது வந்தார்கள். உடல் பருமனாக ஆனபின் ஒன்பது ரக்அத்திலிருந்து இரண்டைக் குறைத்தார்கள். (ஆறாவது ரக்அத்தில் உட்கார்ந்து அத்தஹிய்யாத் ஓதி, பின்பு ஏழாவது ரக்அத் தொழுது அத்தஹிய்யாத் ஓதி ஸலாம் கொடுப்பார்கள்.) இவ்வாறு ஆறு ஏழு ரக்அத்கள் ஆயின. அதன் பின் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கின்ற வரை, (இரவுத் தொழுகை) இவ்வாறுதான் இருந்தது.

(அபூதாவூத்: 1346)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُسَيْنٍ الدِّرْهَمِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا زُرَارَةُ بْنُ أَوْفَى،

أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا سُئِلَتْ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَوْفِ اللَّيْلِ، فَقَالَتْ: ” كَانَ يُصَلِّي الْعِشَاءَ فِي جَمَاعَةٍ، ثُمَّ يَرْجِعُ إِلَى أَهْلِهِ، فَيَرْكَعُ أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ، وَيَنَامُ وَطَهُورُهُ مُغَطًّى عِنْدَ رَأْسِهِ، وَسِوَاكُهُ مَوْضُوعٌ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ سَاعَتَهُ الَّتِي يَبْعَثُهُ مِنَ اللَّيْلِ، فَيَتَسَوَّكُ، وَيُسْبِغُ الْوُضُوءَ، ثُمَّ يَقُومُ إِلَى مُصَلَّاهُ، فَيُصَلِّي ثَمَانِيَ رَكَعَاتٍ، يَقْرَأُ فِيهِنَّ: بِأُمِّ الْكِتَابِ، وَسُورَةٍ مِنَ الْقُرْآنِ، وَمَا شَاءَ اللَّهُ، وَلَا يَقْعُدُ فِي شَيْءٍ مِنْهَا حَتَّى يَقْعُدَ فِي الثَّامِنَةِ، وَلَا يُسَلِّمُ، وَيَقْرَأُ فِي التَّاسِعَةِ، ثُمَّ يَقْعُدُ، فَيَدْعُو بِمَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَهُ، وَيَسْأَلَهُ، وَيَرْغَبَ إِلَيْهِ، وَيُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً شَدِيدَةً يَكَادُ يُوقِظُ أَهْلَ الْبَيْتِ مِنْ شِدَّةِ تَسْلِيمِهِ، ثُمَّ يَقْرَأُ وَهُوَ قَاعِدٌ بِأُمِّ الْكِتَابِ، وَيَرْكَعُ وَهُوَ قَاعِدٌ، ثُمَّ يَقْرَأُ الثَّانِيَةَ، فَيَرْكَعُ وَيَسْجُدُ وَهُوَ قَاعِدٌ، ثُمَّ يَدْعُو مَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَ، ثُمَّ يُسَلِّمُ وَيَنْصَرِفُ، فَلَمْ تَزَلْ تِلْكَ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَّنَ، فَنَقَّصَ مِنَ التِّسْعِ ثِنْتَيْنِ، فَجَعَلَهَا إِلَى السِّتِّ وَالسَّبْعِ، وَرَكْعَتَيْهِ وَهُوَ قَاعِدٌ، حَتَّى قُبِضَ عَلَى ذَلِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1346.
Abu-Dawood-Alamiah-1145.
Abu-Dawood-JawamiulKalim-1146.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.