ஹதீஸ் எண்-1346 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில்,
“நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுதுவிட்டு, (உறங்குவதற்காக) தம் விரிப்பின் பக்கம் ஒதுங்குவார்கள் (என்றும் மட்டும் உள்ளது. நான்கு ரக்அத்துகள் தொழுகை குறித்து குறிப்பிடவில்லை. மற்றவை முன்புள்ள நபிமொழி போன்றே இடம்பெறுகிறது.)
நபி (ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். கிராஅத் (ஓதுவது), குனிவது, சிரம்பணிவது ஆகியவற்றைச் சமமான அளவில் செய்வார்கள். இந்த எட்டு ரக்அத்துகளில் எதிலும் உட்காராமல் எட்டாவது ரக்அத்தில் மட்டும் (அத்தஹிய்யாத்திற்கு) அமர்வார்கள். எட்டாவது ரக்அத்தில் அமர்ந்து அத்தஹிய்யாத் ஓதிய பின் ஸலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுது தொழுகையை ஒற்றைப் படையாகத் தொழுவார்கள். எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பும் அளவுக்குக் குரல் உயர்த்தி ஸலாம் கொடுப்பார்கள்.
(என்று இந்த அறிவிப்பில் உள்ளது. மற்றவை முன்புள்ள அறிவிப்பாளர்தொடரில் இருப்பதைப் போன்றே உள்ளது.)
(அபூதாவூத்: 1347)حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، فَذَكَرَ هَذَا الْحَدِيثَ بِإِسْنَادِهِ، قَالَ:
يُصَلِّي الْعِشَاءَ، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ، لَمْ يَذْكُرِ الْأَرْبَعَ رَكَعَاتٍ، وَسَاقَ الْحَدِيثَ، وَقَالَ فِيهِ: فَيُصَلِّي ثَمَانِيَ رَكَعَاتٍ يُسَوِّي بَيْنَهُنَّ فِي الْقِرَاءَةِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ، وَلَا يَجْلِسُ فِي شَيْءٍ مِنْهُنَّ، إِلَّا فِي الثَّامِنَةِ، فَإِنَّهُ كَانَ يَجْلِسُ، ثُمَّ يَقُومُ، وَلَا يُسَلِّمُ فِيهِ، فَيُصَلِّي رَكْعَةً يُوتِرُ بِهَا، ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمَةً يَرْفَعُ بِهَا صَوْتَهُ حَتَّى يُوقِظَنَا، ثُمَّ سَاقَ مَعْنَاهُ.
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1347.
Abu-Dawood-Alamiah-1145.
Abu-Dawood-JawamiulKalim-1146.
சமீப விமர்சனங்கள்