நிச்சயமாக வளமும் உயர்வும் மிக்க உங்கள் இறைவன் வெட்கப்படுபவன்; சங்கையானவன். ஒரு அடியான் அவனிடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அவன் வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸீ (ரலி)
(அபூதாவூத்: 1488)حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا عِيسَى يَعْنِي ابْنَ يُونُسَ، حَدَّثَنَا جَعْفَرٌ يَعْنِي ابْنَ مَيْمُونٍ، صَاحِبَ الْأَنْمَاطِ، حَدَّثَنِي أَبُو عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ، أَنْ يَرُدَّهُمَا صِفْرًا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1490.
Abu-Dawood-Shamila-1488.
Abu-Dawood-Alamiah-1273.
Abu-Dawood-JawamiulKalim-1275.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஜஃபர் பின் மைமூன் என்பவர் பற்றி இவர் ஒரு பொருட்டே அல்ல என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும், அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளனர். - உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள், இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியைப் போல் யாரும் அறிவிக்கவில்லை. இவர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்று கூறியுள்ளார். - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவரின் செய்தியை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/313, தக்ரீபுத் தஹ்தீப்-1/201)
அபூஉஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்ற பலமான அறிவிப்பாளர்கள் இந்த செய்தியை நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளனர் என்பதால் இதில் இவர் தவறு செய்துள்ளார் என்று தெரிகிறது.
மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .
ஸலாம்.இந்த ஹதீஸ் பிரார்த்தனை ஒழுங்குகள் என்ற தலைப்பின்கீழ் உள்ளதால் இது லைஃப் என்று தெரியாமலேயே பயான்களிள் பயன்படுத்துகிறார்கள். பலவீனமான ஹதீஸ் தொகுப்பிலும் இதை இணைக்கலாமே.
வ அலைக்கும் ஸலாம்.
இன்ஷா அல்லாஹ் பலவீனமான ஹதீஸ் தொகுப்பில் சேர்க்கிறோம். ஜஸாகல்லாஹு கைரா.
11:06 AM
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரரே உங்கள் பக்கத்தை
லேப்டாப்பில் ஓபன் செய்தால் வைரஸ் என்று வருகிறது
ஓபன் ஆகவில்லை
வ அலைக்கும் ஸலாம்.
ஆம். சரி செய்யும் வேலை நடைபெறுகிறது. துஆ செய்யவும்.
Please check now
இப்போதும் வைரஸ் என்று தான் வருகிறது ஓபன் ஆக வில்லை
Whatsapp me, screenshot: 9842470497
அஸ்ஸலாமு அலைக்கும்.
1) வேறு பிரவுசரில் ஒப்பன் செய்து பார்க்கவும். உதா, Edge, Firefox.
2) Google Chrome Extension அனைத்தையும் Off செய்து பார்க்கவும்.
3) மொபைலில் ஓப்பன் செய்தாலும் இப்படி வருகிறதா?
4) https://tamil.quranandhadis.com/ என்பதை ஓப்பன் செய்யவும்.
5) If you are ok to connect through Anydesk/Teamviewer, msg me so.
6) Send results and screenshot to 9842470497
I sent scree shot your whatsapp,please check
Jazakallahu Khair, பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டது. Browser cache Clear செய்து பாருங்கள். ஒரு வேளை இருந்தால், தெரியப்படுத்துங்கள்.