தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23714

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நிச்சயமாக ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி நலவைக் கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கமடைகிறான் என்று ஸல்மான் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபூஉஸ்மான் (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 23714)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ

«إِنَّ اللَّهَ لَيَسْتَحِي أَنْ يَبْسُطَ الْعَبْدُ إِلَيْهِ يَدَيْهِ يَسْأَلُهُ فِيهِمِا خَيْرًا، فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-22600.
Musnad-Ahmad-Shamila-23714.
Musnad-Ahmad-Alamiah-22600.
Musnad-Ahmad-JawamiulKalim-23083.




  • இதன் அறிவிப்பாளர் தொடர் மவ்கூஃப் ஆகும்.
  • இந்த செய்தி சில அறிவிப்புகளில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும், சில அறிவிப்புகளில் நபித்தோழர் கூறியதாகவும் வந்துள்ளது. இதை மர்ஃபூவாக அறிவிக்கும் அறிவிப்பாளர்களை விட மவ்கூஃபாக அறிவிக்கும் அறிவிப்பாளர்களான ஸுலைமான் அத்தைமீ, ஸாபித் பின் அஸ்லம், யஸீத் பின் அபூஸாலிஹ், ஜுரைரீ, அபூஹபீப், ஹுமைத் அத்தவீல் ஆகியோர் மிக பலமானவர்கள்; அதிகமானவர்கள் என்பதால் இது மவ்கூஃபான செய்தி என்று கூறுவதே பொருத்தமானது.
  • இது நபித்தோழரின் கூற்றுதான். என்றாலும் இதை இவர் சுயமாக கூறியிருக்க மாட்டார் என்று சிலர் கருத வாய்ப்புள்ளது. வேறு சில நூல்களின் அறிவிப்பாளர் தொடரில் ஸல்மான் (ரலி) அவர்கள் இந்தக் கருத்தை நான் தவ்ராத் வேதத்தில் கண்டேன் என்று கூறியதாக வந்துள்ளது என்பதால் இது பலவீனமான செய்தியாகும். (சுருக்கம்)

(பார்க்க: அல்அஸ்மாஉ வஸ்ஸிஃபாத்-பைஹகீ-156)

1 . இந்தக் கருத்தில் ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  •  ஜஃபர் பின் மைமூன் —> அபூஉஸ்மான் —> ஸல்மான் (ரலி) —> நபி (ஸல்) 

பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23715 , இப்னு மாஜா-3865 , அபூதாவூத்-1488 , திர்மிதீ-3556 ,  முஸ்னத் பஸ்ஸார்-2511 , 2510 , இப்னு ஹிப்பான்-876 , 880 , அல்முஃஜமுல் கபீர்-6130 , 6148 , ஹாகிம்-1830 , 1831 , 1962 , ஸுனன் குப்ரா பைஹகீ-3146 ,

  • ஸுலைமான் அத்தைமீ, ஸாபித் பின் அஸ்லம், யஸீத் பின் அபூஸாலிஹ், ஜுரைரீ, அபூஹபீப், ஹுமைத் அத்தவீல் —> அபூஉஸ்மான் —> ஸல்மான் (ரலி) 

பார்க்க: அஸ்ஸுஹ்த்-வகீஃ-504, ஹதீஸு அலீ பின் ஹுஜ்ர்-127, அஸ்ஸுஹ்த் லிஹன்னாத்-2/629, அல்கரமு வல்ஜூத்-புர்ஜுலானி-32 , இப்னு அபீஷைபா-29555 , 34677 , முஸ்னத் அஹ்மத்-23714 , அல்அஸ்மாஉ வஸ்ஸிஃபாத்-பைஹகீ-156 , …

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-1832 .

3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீயஃலா-1867 .

4 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13557 .

கூடுதல் தகவல்: almaktaba , ஃபள்லுர் ரஹீமுல் வதூத்-1488, 18/286)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.