நிச்சயமாக அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன், வெட்கப்படுபவன், பெருந்தன்மை மிக்கவன். (எனவே) ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது எந்த நன்மையும் தராமல் இருப்பதை (வெறுங்கையாக விடுவதை) அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(ஹாகிம்: 1832)أَخْبَرْنَاهُ أَبُو عَبْدِ اللَّهِ الصَّفَّارُ، ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي الدُّنْيَا، ثنا بِشْرُ بْنُ الْوَلِيدِ الْقَاضِي، ثنا عَامِرُ بْنُ يَسَافٍ، عَنْ حَفْصِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ رَحِيمٌ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي مِنْ عَبْدِهِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ، ثُمَّ لَا يَضَعُ فِيهِمَا خَيْرًا»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1832.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1765.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20532-ஆமிர் பின் யஸாஃப் என்பவர் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம், உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
ஆகியோர் இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம். இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளனர். - அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இவர் பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர்; இவர் பலவீனமானவர் தான் என்றாலும் இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும், நகிரஹ் (அறியப்படாதவர்) என்றும் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் ஆமிர் பின் யஸாஃப் என்ற ஆமிர் பின் அப்துல்லாஹ் பின் யஸாஃப் என்று குறிப்பிட்டு விட்டு இவரை சிறிது பலவீனமானவர் என்றும் அறியப்படாதவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: அல்காஷிஃப்-3/64, தஹ்தீபுத் தஹ்தீப்-2/269, தஃஜீலுல் மன்ஃபஅஹ்- 1/708, தக்ரீபுத் தஹ்தீப்-1/477)
…
2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-3250 , 20556 , முஸ்னத் அபீயஃலா-4108 , ஹாகிம்-1832 ,
மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .
சலாம்.
இந்த ஹதீஸ் அனஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொழிபெயர்ப்பில் சல்மான்(ரலி) அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஸலாம். ஜஸாகல்லாஹு கைரா, பிழை திருத்தப்பட்டுள்ளது.