தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1831

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

1831. நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், பெருந்தன்மை மிக்கவன். (எனவே) ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: (ரலி)

ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:

இதே செய்தி அனஸ் (ரலி) அவர்களின் வழியாக (வேறு பல அறிவிப்பாளர்கள் மூலம்) அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு (ஷாஹித்) சாட்சியாகும். (பார்க்க அடுத்த ஹதீஸ் எண்-1832)

 

ஸல்மான் பார்ஸீ (ரலி)

سلمان الفارسي

இறப்பு: ஹிஜ்ரி 34 அல்லது 36, மதாஇன்

தரம்: நபித்தோழர்


விபரங்கள்

இயற்பெயர்: மாபஹ் பின் பூதக்ஷான் பின் மூர்ஸலா பின் பஹ்பூதான்

தந்தை பெயர்: பூதக்ஷான் பின் மூர்ஸலா

வம்சம்: பனூ ஹாஷிமின் மவ்லா

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அல்-கைர்

ஊர் பெயர்: அஸ்ஃபஹான்

பயணித்த ஊர்கள்: அஸ்ஃபஹான், ஜியா, மதீனா, ஃபார்ஸ், கூஃபா, மதாஇன்

பிறப்பு: அஸ்ஃபஹான்

இறப்பு: ஹிஜ்ரி 34 அல்லது 36, மதாஇன்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸல்மான் பார்ஸீ ரலி அவர்கள் அஸ்ஃபஹான் அல்லது ரமேஹார்மஸ் பகுதியைச் சேர்ந்தவர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது இஸ்லாத்தைத் தழுவினார். அகழ் போரில் பங்கேற்றார்.

இவர் 250 அல்லது 350 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஹிஜ்ரி 34 அல்லது 36 ஆம் ஆண்டு மதாஇன் நகரில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அனஸ் பின் மாலிக், கஅப் பின் உஜ்ரா, இப்னு அப்பாஸ், அபூ ஸயீத் அல்குத்ரீ, அபூத் துஃபைல், ஆமிர் பின் வாத்திலா, உம்முத் தர்தா, அபூ உஸ்மான் அந்நஹ்தீ, ஸாதான் அபூ உமர், ஸயீத் பின் வஹ்ப அல்ஹம்தானீ, தாரிக் பின் ஷிஹாப், அப்துர்ரஹ்மான் பின் யஸீத் அந்நகஈ, ஷஹ்ர் பின் ஹவ்ஷப்

வேறு பெயர்கள்: அபூ அப்துல்லாஹ், ஸல்மான் அல்-கைர், ஸல்மான் பின் அல்-இஸ்லாம்


ஆதாரம்: muslimscholars.info (14) · Should verify


أَنْبَأَ أَبُو الْعَبَّاسِ الْمَحْبُوبِيُّ، ثنا سَعِيدُ بْنُ مَسْعُودٍ، ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَ جَعْفَرُ بْنُ مَيْمُونٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سُلَيْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي مِنْ عَبْدِهِ أَنْ يَبْسُطَ إِلَيْهِ يَدَيْهِ، ثُمَّ يَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»

وَلَهُ شَاهِدٌ بِإِسْنَادٍ صَحِيحٍ مِنْ حَدِيثِ أَنَسِ بْنِ مَالِكٍ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1831.
Hakim-JawamiulKalim-1764.



(குறிப்பு: இதில் வரும் நபித்தோழர் ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்களைத்தான் அரபியில் ஸுலைமான் என்று தவறுதலாக  கூறப்பட்டுள்ளது)

மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.