ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்கள் என அபூ உஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து ஸுலைமான் தைமீ அறிவிக்கிறார்.
ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:
இந்த ஹதீஸ் இமாம் புகாரி, முஸ்லிம் அவர்களின் நிபந்தனைப்படி உள்ள சரியான அறிவிப்பாளர்தொடர் ஆகும்.
இந்த செய்தியை அபூஉஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து ஜஃபர் பின் மைமூன் அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். (பார்க்க: அடுத்த ஹதீஸ் எண்- 1831)
(ஹாகிம்: 1830)
أَخْبَرَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ التَّاجِرُ بِمَرْوَ، ثنا سَعِيدُ بْنُ مَسْعُودٍ، ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَ سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ سَلْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
«إِنَّ اللَّهَ يَسْتَحِي أَنْ يَبْسُطَ الْعَبْدُ إِلَيْهِ يَدَيْهِ فِيهِمَا خَيْرًا فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»
هَذَا إِسْنَادٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ ” وَقَدْ وَصَلَهُ: جَعْفَرُ بْنُ مَيْمُونٍ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1830.
Hakim-JawamiulKalim-1763.
சலாம்.
அரபு மூலத்தில் மவ்கூஃபாக வருகிறது. ஆனால் மொழிபெயர்ப்பு மர்ஃபூவாக இருப்பது ஏன்?
ஸலாம். மேற்கண்ட ஹதீஸில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி