தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3556

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், சங்கையானவன். ஒரு மனிதர்  தனது இருகைகளை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)

(திர்மிதி: 3556)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: أََخْبَرَنَا جَعْفَرُ بْنُ مَيْمُونٍ، صَاحِبُ الأَنْمَاطِ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ سَلْمَانَ الفَارِسِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَرَوَاهُ بَعْضُهُمْ وَلَمْ يَرْفَعْهُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3479.
Tirmidhi-Shamila-3556.
Tirmidhi-Alamiah-3479.
Tirmidhi-JawamiulKalim-3508.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஜஃபர் பின் மைமூன் என்பவர் பற்றி இவர் ஒரு பொருட்டே அல்ல என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும், அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
  • உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள், இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியைப் போல் யாரும் அறிவிக்கவில்லை. இவர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவரின் செய்தியை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/313, தக்ரீபுத் தஹ்தீப்-1/201)

அபூஉஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்ற பலமான அறிவிப்பாளர்கள் இந்த செய்தியை நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளனர் என்பதால் இதில் இவர் தவறு செய்துள்ளார் என்று தெரிகிறது.

மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.