தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-34617

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

யார் தனது வீட்டில் அழகிய முறையில் உளூச் செய்து, பிறகு பள்ளிக்கு (தொழுகைக்காக) வருகிறாரோ அவர் அல்லாஹ்வின்  விருந்தாளியாவார். விருந்தாளியைக் கண்ணியப் படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும் என்று ஸல்மான் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉஸ்மான் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34617)

جَعْفَرُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ:

«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ لِيُصَلِّيَ فِيهِ كَانَ زَائِرَ اللَّهِ، وَحَقٌّ عَلَى الْمَزُورِ أَنْ يُكْرِمَ زَائِرَهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34617.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-33927.




குறிப்பு: இந்தச் செய்தியில் நூலாசிரியர் அபூபக்ர் பின் அபூஷைபா அவர்களின் ஆசிரியர் பெயர் ஜஅஃபர் பின் ஃகியாஸ் என்று உள்ளது. இவ்வாறு சில பிரதிகளில் இருந்தாலும் வேறு சில பிரதிகளில் ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் என்று உள்ளது என்றும், ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் என்ற பெயர் தான் சரியானது என்றும் இந்த நூலின் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு அபூஷைபா இமாம்-அபூபக்ர்-அப்துல்லாஹ் பின் முஹம்மத்

2 . ஹஃப்ஸ் பின் ஃகியாஸ்-அன்னகஈ

3 . ஆஸிம் பின் ஸுலைமான்-அல்அஹ்வல்

4 . அபூஉஸ்மான்-அப்துர்ரஹ்மான் பின் முல்

5 . ஸல்மான் ஃபாரிஸீ (ரலி)


 

 


1 . இந்தக் கருத்தில் ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-953, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34617, அஸ்ஸுஹ்த்-அஹ்_மத்-821, அல்முஃஜமுல் கபீர்-6139, 6145,


  • அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-953.

الزهد لهناد بن السري (2/ 471)
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ قَالَ: «مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ , ثُمَّ أَتَى الْمَسْجِدَ كَانَ لِلَّهِ زَائِرًا وَحَقٌّ عَلَى الْمَزُورِ أَنْ يُكْرِمَ زَائِرَهُ»


  • அஸ்ஸுஹ்த்-அஹ்_மத்-821.

الزهد لأحمد بن حنبل (ص: 125)
821 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ قَالَ:
لَوْ يَعْلَمُ النَّاسُ عَوْنَ اللَّهِ لِلضَّعِيفِ مَا غَالَوْا بِالظَّهْرِ
قَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَسْتَحْيِي مِنَ الْعَبْدِ يَبْسُطُ إِلَيْهِ يَدَيْهِ يَسْأَلُهُ فِيهِمَا خَيْرًا؛ فَيَرُدُّهُمَا خَائِبَيْنِ،
قَالَ لَهُ: لَوْ بَاتَ رَجُلٌ يُطَاعِنُ الْأَفْرَانَ وَبَاتَ آخَرُ يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ رَأَيْتُ أَنَّ ذَاكِرَ اللَّهِ وَذَاكِرَ الْقُرْآنِ أَفْضَلُ، قَالَ: مَا مِنْ رَجُلٍ يَتَوَضَّأُ، فَيُحْسِنُ الْوُضُوءَ، ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ فَلَا يَأْتِيهِ إِلَّا لِعِبَادَةٍ، إِلَّا كَانَ زَائِرًا لِلَّهِ عَزَّ وَجَلَّ، وَحَقٌّ عَلَى اللَّهِ كَرَامَةُ الزَّائِرِ “

ஸல்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இயலாதவருக்கு அல்லாஹ் செய்யும் உதவியை மக்கள் அறிந்துகொண்டால், அவர்கள் (பயணத்திற்காக) வாகனங்களை வாங்குவதில் இவ்வளவு அதிகமாகச் செலவு செய்யமாட்டார்கள்.

மேலும் அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் மிகவும் வெட்கப்படுபவன். தனது அடியான் தன்னிடம் கையேந்தி நன்மைகளைக் கேட்கும்போது, அவற்றை (வழங்காமல்) வெறும் கையாகத் திருப்பி அனுப்ப அவன் வெட்கப்படுகிறான்.

மேலும் அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் இரவு முழுவதும் (அல்லாஹ்வின் பாதையில்) எதிரிகளுடன் போரிடுகிறார்; மற்றொருவர் இரவு முழுவதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து (திக்ரு செய்து) கொண்டிருக்கிறார் என்றால், அல்லாஹ்வை நினைவுகூருபவரும் குர்ஆனை ஓதுபவருமே சிறந்தவர் என்று நான் கருதுகிறேன்.

மேலும் அவர்கள் கூறினார்கள்:

யாராவது ஒருவர் முறையாக உளூச் செய்து, பிறகு வணக்கத்திற்காகவே தவிர வேறெந்த நோக்கமுமின்றி பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் அல்லாஹ்வைச் சந்திக்க வந்த விருந்தினராவார். தன்னைச் சந்திக்க வந்த விருந்தினரைக் கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வின் மீது கடமையாகும்.


ஸல்மான் (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள இந்தச் செய்திகளை சிலர் தனித்தனியாகவும் அறிவித்துள்ளனர். சிலர் இவற்றில் சிலதை நபியின் சொல்லாக அறிவித்திருந்தாலும் அவற்றில் விமர்சனம் உள்ளது.


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1184, அஹ்மத்-23714,

2 comments on Musannaf-Ibn-Abi-Shaybah-34617

    1. அஸ்ஸலாமு அலைக்கும். இது ஸல்மான் (ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ளது என்பதே மஹ்ஃபூல் ஆகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.