தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-149

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்.

தபூக் யுத்தத்தின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் பயணத்தில் இருந்தேன். பஜ்ர் தொழுகைக்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் (முக்கிய பாதையை விட்டும்) வேறு பாதையில் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பிச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தை படுக்க வைத்து விட்டு தமது (மல,ஜல) தேவைகளை நிறைவேற்ற தனித்துச் சென்றார்கள். அவர்கள் திரும்பி வந்ததும் தோல் பையிலிருந்து அவர்களது கையில் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது இரு முன்கைகளையும் வெளியே கொண்டு வர முற்பட்டார்கள். அவர்கள் அணிந்திருந்த குளிராடையின் கைகள் இருக்கமாக இருந்ததால், அவற்றை சுருட்ட சிரம்மப் பட்டார்கள். இரு கைகளையும் சட்டையின் உட்புறமாக வெளியே கொண்டு வந்து, இரு கைகளையும் முழங்கை வரை கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். பிறகு, தமது இரு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். பின்னர், பயணமானார்கள்.

நாங்கள் (நபித் தோழர்கள் இருந்த இடத்திற்கு) மக்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைப் பின்பற்றி தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அவர் உரிய நேரத்தில் அவர்களுக்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். நாங்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை பஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத் முடிந்து விட்ட நிலையில் அடைந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை பின் பற்றி மற்ற முஸ்லிம்களுடன் அணியில் நின்று இரண்டாவது ரக்அத்தை தொழுதார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஸலாம் கூறியதும், நபி (ஸல்) அவர்கள் (விடுபட்டதைத் தொழ) எழுந்து நின்றார்கள். இதை கண்ட முஸ்லிம்கள் உடனே திடுக்குற்று தஸ்பீஹை அதிகமாக்கினார்கள். ஏனெனில், அவர்கள் நபி (ஸல்) அவர்களை விட முந்தித் தொழுதுவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸலாம் கூறியதும், அவர்களை நோக்கி நீங்கள் முறையாக செய்தீர்கள் என்றோ அல்லது நல்லதை செய்தீர்களோ என்றோ கூறினார்கள். 

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)

(அபூதாவூத்: 149)

59- بَابُ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبَّادُ بْنُ زِيَادٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَاهُ الْمُغِيرَةَ، يَقُولُ

عَدَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا مَعَهُ فِي غَزْوَةِ تَبُوكَ قَبْلَ الْفَجْرِ، فَعَدَلْتُ مَعَهُ، فَأَنَاخَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَبَرَّزَ، ثُمَّ جَاءَ فَسَكَبْتُ عَلَى يَدِهِ مِنَ الإِدَاوَةِ، فَغَسَلَ كَفَّيْهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، ثُمَّ حَسَرَ عَنْ ذِرَاعَيْهِ، فَضَاقَ كُمَّا جُبَّتِهِ، فَأَدْخَلَ يَدَيْهِ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ، فَغَسَلَهُمَا إِلَى الْمِرْفَقِ، وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ تَوَضَّأَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ رَكِبَ، فَأَقْبَلْنَا نَسِيرُ حَتَّى نَجِدَ النَّاسَ فِي الصَّلَاةِ قَدْ قَدَّمُوا عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، فَصَلَّى بِهِمْ حِينَ كَانَ وَقْتُ الصَّلَاةِ وَوَجَدْنَا عَبْدَ الرَّحْمَنِ وَقَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً مِنْ صَلَاةِ الْفَجْرِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَفَّ مَعَ الْمُسْلِمِينَ فَصَلَّى وَرَاءَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ الرَّكْعَةَ الثَّانِيَةَ، ثُمَّ سَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاتِهِ فَفَزِعَ الْمُسْلِمُونَ، فَأَكْثَرُوا التَّسْبِيحَ لِأَنَّهُمْ سَبَقُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلَاةِ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهُمْ: «قَدْ أَصَبْتُمْ – أَوْ قَدْ أَحْسَنْتُمْ -»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-149.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-128.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்பாத் பின் ஸியாத் அறியப்படாதவர் என இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு கல்ஃபூன் பிறப்பு ஹிஜ்ரி 555
    இறப்பு ஹிஜ்ரி 636
    வயது: 81
    போன்றோர் பலமானவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்….

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

1. பார்க்க : அபூதாவூத்-149 , முஸ்லிம்-461 , குப்ரா நஸாயீ-165 , அஹ்மத்-18175 , இப்னு ஹிப்பான்-2224 ,

2 . புகாரி-182 , முஸ்லிம்-455 , …

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.