தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-15

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 7

கழிவறையில் பேசுவது அருவருக்கத்தக்கது.

இரண்டு மனிதர்கள் மலம் கழிக்க (ஒன்றாகச்) சென்று, ஒருவர் மற்றவருக்கு முன் மறைவான உறுப்புகளைத் திறந்தும், பேசிக் கொண்டும் மலம் கழிக்க வேண்டாம். இதனால் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கோபப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து பலர் இந்த நபிமொழியை அறிவிக்கிறார்கள். இவர்களில்) இக்ரிமா பின் அம்மார் மட்டும் தான் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். (மற்றவர்கள் மவ்கூஃபாக-நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்)

(அபூதாவூத்: 15)

7 – بَابُ كَرَاهِيَةِ الْكَلَامِ عِنْدَ الْحَاجَةِ

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ هِلَالِ بْنِ عِيَاضٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«لَا يَخْرُجُ الرَّجُلَانِ يَضْرِبَانِ الْغَائِطَ كَاشِفَيْنِ عَنْ عَوْرَتِهِمَا يَتَحَدَّثَانِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَمْقُتُ عَلَى ذَلِكَ»

قَالَ أَبُو دَاوُدَ: هَذَا لَمْ يُسْنِدْهُ إِلَّا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ


Abu-Dawood-Tamil-14.
Abu-Dawood-TamilMisc-14.
Abu-Dawood-Shamila-15.
Abu-Dawood-Alamiah-14.
Abu-Dawood-JawamiulKalim-14.




…(குறிப்பு: இந்த இக்ரிமா பின் அம்மார் என்பவர் யஹ்யா பின் அபூகஸீர் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அஹ்மது, நஸயீ ஆகியோர் குறை கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸில் யஹ்யா பின் அபூகஸிர் வாயிலாகவே இக்ரிமா அறிவிப்பதால் இது பலவீனமானதாகும்…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.