பாடம்: 63
(காலுறையின் மீது) மஸஹ் செய்யும் முறை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் (முஹம்மத் பின் ஸப்பாஹ் அல்லாத) மற்றவர்கள், “காலுறையின் மேற்பாகத்தின் மீது மஸஹ் செய்தார்கள்” என்று அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்: 161)63- بَابُ كَيْفَ الْمَسْحُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، قَالَ: ذَكَرَهُ أَبِي، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ
«أَنَّ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلم كَانَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ»،
وَقَالَ غَيْرُ مُحَمَّدٍ: «عَلَى ظَهْرِ الْخُفَّيْنِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-139.
Abu-Dawood-Shamila-161.
Abu-Dawood-Alamiah-139.
Abu-Dawood-JawamiulKalim-139.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் பக்தாதுக்கு சென்றபின் அவருக்கு நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். என்றாலும் இவரைப்போன்றே வேறு சில அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்…
இந்தக் கருத்தில் முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-18156, அபூதாவூத்-161, திர்மிதீ-98, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-, …
மேலும் பார்க்க: அபூதாவூத்-162.
சமீப விமர்சனங்கள்