தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1664

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தங்கத்தையும், வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக’ (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது’ என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை’ அல்லாஹ் வாரிசுரிமை சட்டத்தை கடமையாக்கியதே உங்களுக்கு பின்னால் வரும் வாரிசுகளுக்காக தான் என்று விளக்கமளித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள்.

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள் எனவும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 1664)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا غَيْلَانُ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ} [التوبة: 34]، قَالَ: كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا أُفَرِّجُ عَنْكُمْ، فَانْطَلَقَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ الزَّكَاةَ، إِلَّا لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ، وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ»، فَكَبَّرَ عُمَرُ، ثُمَّ قَالَ لَهُ: «أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ؟ الْمَرْأَةُ الصَّالِحَةُ، إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1417.
Abu-Dawood-Shamila-1664.
Abu-Dawood-Alamiah-1417.
Abu-Dawood-JawamiulKalim-1419.




[حكم الألباني] : ضعيف

  • முஜாஹித் என்பாரிடமிருந்து அபூ பிஷ்ர்-ஜஃபர் பின் இயாஷ் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது. ஆனால் ஜஃபர் பின் இயாஷ் என்பவர் முஜாஹிதிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை’ என்று ஷுஃபா கூறுவதால், இது தொடர்பு அறுந்த செய்தி என்று சிலர் கூறுகின்றனர். ஷுஃபா அவர்கள் இவ்வாறு கூறினாலும், ஷுஃபா அவர்களுக்குப் போதிய விபரம் கிடைக்காததால் இவ்வாறு கூறி விட்டார்கள்.
  • ஜஃபர் பின் இயாஷ், ‘நான் முஜாஹிதிடம் கேட்டேன்’ என்ற சொல்லைப் பயன்படுத்திப் பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இது போன்ற செய்திகள் புகாரி-4310, 4940,  ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • சம்பந்தப்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் நானே நேரடியாக முஜாஹிதிடம் கேட்டேன்’ என்று கூறியிருக்கும் போது, இதில் சம்பந்தப்படாத ஷுஃபா அவர்களின் கூற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. முஜாஹிதிடம் ஜஃபர் செவியுற்றது ஷுஃபாவுக்குத் தெரியவில்லை என்று தான் முடிவு செய்ய வேண்டும்.
  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் கைலான் என்பவருக்கும், ஜஃபர் பின் இயாஸ் என்பவருக்கும் இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளார். மற்ற அறிவிப்புகளில் விடப்பட்ட அந்த அறிவிப்பாளர் عُثْمَان بْن عُمَير أَبُو اليقظان كوفي بجلي உஸ்மான் பின் உமைர் அபூயக்ளான் என்பவராக இருக்கிறார். இவர் பலவீனமானவர் என்பதால் இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும் என்று அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்றோர் கூறியுள்ளனர்.

ضعيف واختلط . وكان يدلس ويغلو في التشيع
تقريب التهذيب: (1 / 667)

  • பலவீனமான இந்த அறிவிப்பின் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூதாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று முடிவு செய்வது அர்த்தமற்ற ஆய்வாகும்.
  • உண்மையில் கைலான் என்பார் ஜஃபர் பின் இயாஸைச் சந்திக்க இயலுமா என்றால் நிச்சயம் முடியும். ஏனெனில் கைலானின் மரணம் ஹிஜிரி 132ஆம் ஆண்டாகும். ஜஃபர் பின் இயாஸின் மரணம் 126வது ஆண்டாகும்.

(தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/443)

(தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/139)

  • இருவரின் மரணத்திற்கிடையே ஆறு வருட இடைவெளி தான் உள்ளது. ஒருவரையொருவர் சந்திப்பதற்கு ஏற்ற காலத்தை விட இது பன்மடங்கு அதிகமாகும்.
  • மேலும் ஜஃபர் பின் இயாஸ் பஸராவையும், கைலான் கூஃபாவையும் சேர்ந்தவர்கள். அருகருகே உள்ள இவ்வூர்களைச் சேர்ந்தவர்கள் சந்திப்பதில் எந்த வியப்பும் இல்லை.
  • ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இரண்டு அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருப்பதற்கும், இருவரும் சந்தித்திருப்பதற்கும் சாத்தியமிருக்குமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் கேட்டார் என்பதற்கு அதுவே போதுமானதாகும் என்று முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவு கோலின் படியே தமது ஹதீஸ்களை முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள். ஹதீஸ் கலை அறிஞர்களும் இதை ஏற்றுள்ளார்கள். எனவே கைலான், ஜஃபரிமிருந்து செவிமடுத்தார் என்பதை மறுக்க முடியாது.
  • மேலும் ஹதீஸ் கலை நூற்களில் ஜஃபரின் மாணவர்கள் பட்டியலில் கைலான் சேர்க்கப்பட்டுள்ளார். அது போல் கைலானின் ஆசிரியர் பட்டியலில் ஜஃபர் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் சந்திக்கவில்லை என்று கூறுவது சரியில்லை. யாருமே ஒப்புக் கொள்ளாத தவறான அளவு கோலின் படி அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    செய்த தவறான முடிவு இது……..

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அபூதாவூத்-1664 , ஹாகிம்-1487 , 3281 ,  அபூயஃலா-2499 , ஸுனன் குப்ரா பைஹகீ-7235 , 7236 , ஷுஅபுல் ஈமான்-3035


ஜகாத் ஆய்வு செய்தி-4.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.