தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1694

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

1694. நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (உறவுமுறையை படைத்து) அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”

என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்-அஸ்ஸுஹ்ரீ (ரலி) – 'Abd ar-Rahman bin 'Awf

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் பின் அப்து அவ்ஃப் பின் அப்து பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா பின் கிலாப் பின் முர்ரா பின் கஅப்

தந்தை பெயர்: அவ்ஃப் பின் அப்து அவ்ஃப்

வம்சம்: ஸுஹ்ரா, குரைஷீ

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, அபிசீனியா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 43, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இவர் இஸ்லாமைத் தழுவிய எட்டாவது நபர் ஆவார். இரண்டு முறை அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார். சுவனவாசி என நற்செய்தி கூறப்பட்ட பத்து நபித்தோழர்களில் இவரும் ஒருவர்.

உமர் (ரலி) அவர்கள் தமக்குப்பின் கலீஃபாவைத் தேர்ந்தெடுப்பதற்காக நியமித்த ஆறு பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில் இவரும் இருந்தார். இவர் ஒரு சிறந்த வணிகராகவும், தாராள குணம் கொண்டவராகவும் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் இவருக்குப் பின்னால் தொழுதிருக்கிறார்கள்.

ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இப்ராஹீம் பின் அப்துர் ரஹ்மான், ஹுமைத் பின் அப்துர் ரஹ்மான், உமர் பின் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், முஸ்அப் பின் அப்துர் ரஹ்மான், அபூ ஸலமா பின் அப்துர் ரஹ்மான், அல்மிஸ்வர் பின் மக்ரமா பின் நவ்ஃபல், இப்னு அப்பாஸ், இப்னு உமர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஜுபைர் பின் முத்இம், அனஸ் பின் மாலிக், முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம்


ஆதாரம்: muslimscholars.info (8) · Should verify


حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

قَالَ اللَّهُ: أَنَا الرَّحْمَنُ وَهِيَ الرَّحِمُ، شَقَقْتُ لَهَا اسْمًا مِنَ اسْمِي، مَنْ وَصَلَهَا وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1694.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1446.



3 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஸலமா —> அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25387 , அஹ்மத்-1686 , அபூதாவூத்-1694 , திர்மிதீ-1907 , முஸ்னத் பஸ்ஸார்-992 , முஸ்னத் அபீ யஃலா-840 , இப்னு ஹிப்பான்-443 , ஹாகிம்-7269 , 7272 , குப்ரா பைஹகீ-13216 , அல்ஆதாப் லில்பைஹகீ-11 ,

…

மேலும் பார்க்க: புகாரி-4830 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.