தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1793

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபித்தோழர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து ஹஜ்ஜூக்கு முன் உம்ரா செய்வதை நபிகள் நாயகம் தடுத்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த நோயின் போது இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றேன் என்று கூறினார்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)

(அபூதாவூத்: 1793)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي حَيْوَةُ، أَخْبَرَنِي أَبُو عِيسَى الْخُرَاسَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْقَاسِمِ، عَنْ سَعِيدِ بْنِ الْمسَيِّبِ،

أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَتَى عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَشَهِدَ عِنْدَهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي قُبِضَ فِيهِ «يَنْهَى عَنِ الْعُمْرَةِ قَبْلَ الْحَجِّ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1528.
Abu-Dawood-Shamila-1793.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1530.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24106-அப்துல்லாஹ் பின் காசிம் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களைத் தவிர வேறு யாரும் இவரை நம்பகமானவர் என்று சான்றளிக்கவில்லை.
  • நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாதவர்களையும் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் சான்றளித்து விடுவதால் தனித்த நிலையில் இவரது சான்றிதழ் ஏற்கப்படாது என்பது ஹதீஸ் கலை அறிஞர்கள் அறிந்த விஷயமாகும்.

எனவே இதனடிப்படையில் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1793 , குப்ரா பைஹகீ-8868 ,

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜூக்கு முன்பு உம்ரா செய்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. பார்க்க : புகாரீ-4254 , 1774 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.