தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1811

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு மனிதர் லப்பைக்க அன் ஷுப்ருமா(ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷுப்ருமா என்பவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் இல்லைஎன்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்! என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 1811)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ الْمَعْنَى وَاحِدٌ – قَالَ إِسْحَاقُ: – حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَزْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ: لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ، قَالَ: «مَنْ شُبْرُمَةُ؟» قَالَ: أَخٌ لِي – أَوْ قَرِيبٌ لِي – قَالَ: «حَجَجْتَ عَنْ نَفْسِكَ؟» قَالَ: لَا، قَالَ: «حُجَّ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1546.
Abu-Dawood-Shamila-1811.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1548.




இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, இப்னு மாஜா-2903 , அபூதாவூத்-1811 , முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-2440 , இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, தாரகுத்னீ- …

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

2 comments on Abu-Dawood-1811

  1. செய்என்றார்கள்
    இந்த இரண்டு வாரங்களுக்கு மத்தியில் இடைவெளி வேண்டும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. பிழை திருத்தப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.