தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-184

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 72

ஒட்டக இறைச்சியை உண்ணுவதால் உளூச் செய்தல்.

ஒட்டகை இறைச்சியை சாப்பிட்டால் உளூச் செய்ய வேண்டுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், அதை சாப்பிட்டால் உளூச் செய்யுங்கள் என்று பதிலளித்தார்கள். ஆட்டிறைச்சியைச் சாப்பிட்டால் உளூச் செய்ய வேண்டுமா? என்று வினவப்பட்ட போது அதற்காக நீங்கள் உளூச் செய்ய வேண்டாம் என்று பதிலளித்தார்கள்.

ஒட்டகைத் தொழுவங்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது ஒட்டகைத் தொழுவங்களில் தொழாதீர்கள். காரணம் அவை (ஒட்டகங்கள்) ஷைத்தான்களின் வகையாகும் என்று பதிலளித்தார்கள். ஆட்டுக் கொட்டில்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது அவற்றில் நீங்கள் தொழுங்கள். அவை (ஆடுகள்) அபிவிருத்திக்குரியவை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

(அபூதாவூத்: 184)

72- بَابُ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّازِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ، فَقَالَ: «تَوَضَّئُوا مِنْهَا» وَسُئِلَ عَنْ لُحُومِ الْغَنَمِ، فَقَالَ: «لَا تَوَضَّئُوا مِنْهَا»، وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَبَارِكِ الْإِبِلِ، فَقَالَ: «لَا تُصَلُّوا فِي مَبَارِكِ الْإِبِلِ، فَإِنَّهَا مِنَ الشَّيَاطِينِ» وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَرَابِضِ الْغَنَمِ، فَقَالَ: «صَلُّوا فِيهَا فَإِنَّهَا بَرَكَةٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-156.
Abu-Dawood-Shamila-184.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-156.




இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-18538 , 18703 , இப்னு மாஜா-494 , அபூதாவூத்-184493 , திர்மிதீ-81 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.