ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி)
(அபூதாவூத்: 1892)بَابُ الدُّعَاءِ فِي الطَّوَافِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا بَيْنَ الرُّكْنَيْنِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1616.
Abu-Dawood-Shamila-1892.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1618.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27169-அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி) அவர்களின் அடிமை உபைத் இந்த ஒரு செய்தியின் மூலமே தெரியவருகிறார். இவர் அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஒரு செய்தியை மட்டுமே அறிவித்துள்ளார். அவரிடமிருந்து அவரின் மகன் யஹ்யா பின் உபைத் மட்டுமே அறிவித்துள்ளார்.
- உபைத், அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி) அவர்களின் அடிமை என்பதே சரியென்றும், ஸாயிப் (ரலி) அவர்களின் அடிமை என்று வரும் பிரதிகளில் தவறு ஏற்பட்டுவிட்டது என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இவர் நபித்தோழர் அல்ல. தாபிஈ என்பதே சரி என்று தெளிவுபடுத்தியுள்ளார். (நூல்: அல்இஸாபா 8/379) - இதனடிப்படையில் உபைத் அறியப்படாதவர் என்ற வகையில் இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீமானதாகும். ஆனால் இப்னு கானிஃ, இப்னு முன்தஹ், அபூநுஐம் போன்றோர் இவரை நபித்தோழர் என்று கூறியுள்ளனர் என்பதால் சிலர் இந்த செய்தியை சரியானது எனக் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/43)
- அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றோர் இந்த செய்தியை ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : இப்னு அபீ ஷைபா-15815 , 29632 , அஹ்மத்-15398 , 15399 , அபூதாவூத்-1892 , குப்ரா நஸாயீ-3920 , இப்னு குஸைமா-2721 , இப்னு ஹிப்பான்-3826 , ஹாகிம்-1673 ,
சமீப விமர்சனங்கள்