தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-20

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 11

சிறுநீர் (உடலிலும் ஆடையிலும்) பட்டுவிடாமல் கவனமாக இருப்பது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். (மண்ணறைவாசிகள்) இருவரும் வேதனை
செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (அவர்கள்) பெரிய குற்றத்திற்காக வேதனை செய்யப்படவில்லை என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரில் ஒருவர், சிறுநீர் (கழித்துவிட்டு, சிறுநீர் தன் உடல்மீது அல்லது தன் ஆடையில்) பட்டுவிடாமல் இருக்கக் கவனம் செலுத்தவில்லை.
மற்றொருவர், கோள் (புறம்) சொல்லித் திரிபவர் என்று கூறினார்கள்.

பின்னர் பேரீச்ச மரத்தின் பசுமையான கிளையொன்றைக் கொண்டுவரும்படிக் கூறினார்கள். (கொண்டுவந்து கொடுக்கப்பட்டது). அதை இரண்டாகப் பிளந்து ஒரு மண்ணறை மீது ஒன்றையும், மற்றொரு மண்ணறை மீது இன்னொன்றையும் நட்டு வைத்து, “இந்தக் கிளைகள் காயாமல் இருக்கும் வரை இவ்விருவருக்கும் வேதனை குறைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(எனது ஆசிரியர்) ஹன்னாத் (ரஹ்) அவர்கள் “மலஜலம் கழித்துவிட்டு சரியாகத் தூய்மை செய்யமாட்டார்” என்ற இடத்தில், “மலஜலம் கழிக்கும் போது (மக்களின் பார்வையை விட்டும்) மறைக்க மாட்டார்” என்று அறிவித்தார்.

(அபூதாவூத்: 20)

11 – بَابُ الِاسْتِبْرَاءِ مِنَ الْبَوْلِ

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، يُحَدِّثُ عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ، ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ، ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا، وَعَلَى هَذَا وَاحِدًا، وَقَالَ: لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا “

قَالَ هَنَّادٌ: يَسْتَتِرُ مَكَانَ يَسْتَنْزِهُ


Abu-Dawood-Tamil-19.
Abu-Dawood-TamilMisc-19.
Abu-Dawood-Shamila-20.
Abu-Dawood-Alamiah-19.
Abu-Dawood-JawamiulKalim-19.




மேலும் பார்க்க: புகாரி-218 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.