பாடம் : 96
ஆண்களைப் போன்று பெண்களும் ஈரத்தைக் கண்டால் ?
ஆசியா உம்முஹுலைம் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே ! உண்மையை கூற அல்லாஹ் வெட்கமடைய மாட்டான். ஒரு பெண் தூக்கத்தில் ஆண் காண்பதையே கண்டால் அவள் குளிக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று வினவியபோது, ஆம்! அவள் நீரைக் கண்டால் குளிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி அன்னையார் அவர்கள் தொடர்ந்து அறிவிக்கிறார்கள், நான் அவர்களை (உம்முஹுலைம்) நோக்கி சீ! ஒரு பெண்ணும் இதை காண்பாளா? என்று கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, ஆயிஷாவே! உனது வலக்கரம் மண்ணை தழுவட்டும் பின் எவ்வாறு (தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உருவ) ஒற்றுமை தோன்றுகிறது? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
ஜுஹ்ரி அவர்களிடமிருந்து மாலிக் அவர்கள் மூலம் ஜுபைதி, உகைல், யூனுஸ், ஜுஹ்ரி அவர்களுடைய சகோதரன் மகனும், ஜுஹ்ரி அவர்களிடமிருந்து மாலிக் மூலம் இப்ராகீம் பின் அபுல் வசீர் ஆகியோரும் இவ்வாறே அறிவிக்கின்றனர்.
ஜுஹ்ரி அவர்களுக்கு உடன்பட்டு முஸாபிஃ அல்ஹஜபீ என்பார் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா மூலம் என்றே அறிவிக்கின்றார். ஆனால் ஹிஷாம் பின் உர்வா அவர்கள், உம்மு ஸுலைம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள் என்று உம்மு ஸலமா, ஜைனப் பின்த் அபீஸலமா, வாயிலாக உர்வா அவர்களிடமிருந்து என்று அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 237)96- بَابٌ فِي الْمَرْأَةِ تَرَى مَا يَرَى الرَّجُلُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: قَالَ عُرْوَةُ، عَنْ عَائِشَةَ
أَنَّ أُمَّ سُلَيْمٍ الْأَنْصَارِيَّةَ هِيَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ أَرَأَيْتَ الْمَرْأَةَ إِذَا رَأَتْ فِي النَّوْمِ مَا يَرَى الرَّجُلُ أَتَغْتَسِلُ أَمْ لَا؟ قَالَتْ عَائِشَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ. فَلْتَغْتَسِلْ إِذَا وَجَدَتِ الْمَاءَ». قَالَتْ عَائِشَةُ: فَأَقْبَلْتُ عَلَيْهَا، فَقُلْتُ: أُفٍّ لَكِ وَهَلْ تَرَى ذَلِكَ الْمَرْأَةُ؟ فَأَقْبَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تَرِبَتْ يَمِينُكِ يَا عَائِشَةُ، وَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ؟»
قَالَ أَبُو دَاوُدَ : وَكَذَلِكَ رَوَى عُقيْلٌ، وَالزُّبَيْدِيُّ، وَيُونُسُ، وَابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنِ الزُّهْرِيِّ، وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، وَوَافَقَ الزُّهْرِيُّ: مُسَافِعًا الْحَجَبِيَّ قَالَ: عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَأَمَّا هِشَامُ بْنُ عُرْوَةَ فَقَالَ: عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
AbuDawood-Tamil-237.
AbuDawood-Shamila-237.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்